நான் பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன்... ஆவேசமாக பேசிய ஸ்டாலின்
சென்னை: வழக்கு போட்டாலும் கொடநாடு விவகாரம் குறித்து பேசுவேன் என்று கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், தான் பனங்காட்டு நரி என்றும், எந்த சலசலப்புக்கும் அஞ்சு மாட்டேன் என்றும் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனுக்கு ஆதரவாக சென்னை கண்ணகி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், "பிரதமர் மோடி ராணுவத்தினரின் சாதனைகளை தேர்தல் ஆதயாத்துக்காக பயன்படுத்துவதா நியாயமா? இப்போது விஞ்ஞானிகளையும் மோடி விட்டுவைக்கவில்லை. தான் தான் அரசு என்பது போல் நினைத்து பிரதர் மோடி சர்வாதிகாரியாக செயல்படுகிறார். முதல்வர் எடப்பாடி உதவாக்கரையாக இருக்கிறார்.. மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு மண்டியிட்டு செயல்படுகிறார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுகவினருக்கு தொடர்பு உள்ளது. குறிப்பாக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயரமானின் மகனுககு தொடர்பு உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்ஜிஆர் என்று நினைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.கேட்டால் நிறைய விருதுகள் கிடைத்திருப்பதாக கூறுகிறார். ஆனால் அந்த விருதுகளுக்கே அது மிகப்பெரிய அவமானம். கோடநாடு கொலை சம்பவத்திலே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதை பேசக்கூடாது என்று நீதிமன்றம் போனார்கள். ஆனால் நான் பயந்து போய் ஒதுங்கவில்லை.
ஏனெனில் நாங்கள் திமுகவினர், பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன். நீதிமன்றமே கோடநாடு கொலை விவகாரம் நடந்ததா இல்லையா என கேள்வி எழுப்பி பேசலாம் என அனுமதி அளித்துள்ளது. கொடநாடு விவகாரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது. மண்புழு போல் காலில் தவந்து பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜெயலலிதா மறைவுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, யார் காரணம் என்பதையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பேன்" என பேசினார்.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications