டெல்லி பக்கமே செல்ல மாட்டேன்.. திட்டவட்டமாக சொன்ன எடப்பாடி.. அலறிய "தாமரை".. நடந்தது என்ன?
சென்னை: இனி டெல்லிக்கு செல்ல மாட்டேன்.. இப்போதைக்கு டெல்லிக்கு செல்லும் எண்ணம் இல்லை என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளாராம்.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார்.

சமீபத்தில் பிஎல் சந்தோஷ் உடனும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனைகளில் தமிழ்நாட்டில் பாஜக 9 இடங்களில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தென் சென்னை, சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது. அண்ணாமலை இதை வெளிப்டையாகவே தொகுதி குறிப்பிடாமல் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
எடப்பாடி திட்டவட்டம்: இன்னொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடி திட்டவட்டமாக இருக்கிறார். கடந்த மாதம் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். கிட்டத்தட்ட 1 மாதம் ஆக போகிறது இந்த கூட்டணியை முறித்து. இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.
இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் தனியாக கூட்டணி அமைப்போம். 2024, 2026 தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
டெல்லி செல்ல மாட்டேன்: இந்த நிலையில் இனி டெல்லிக்கு செல்ல மாட்டேன்.. இப்போதைக்கு டெல்லிக்கு செல்லும் எண்ணம் இல்லை என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளாராம். டெல்லியில் சாக்கேத் என்கிற இடத்தில் அதிமுகவின் புதிய அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. நவீன வசதிகளுடன் பெரிய அளவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்., 24ல் இந்த கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைக்கின்றனர். சரியாக லோக்சபா தேர்தலுக்கு 2-3 மாதங்களுக்கு முன் இதை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. ஆனால் அப்படி செய்ய மாட்டேன் என்று எடப்பாடி கூறிவிட்டாராம்.
நான் டெல்லி செல்ல மாட்டேன். லோக்சபா தேர்தல் சமயத்தில் டெல்லி சென்றால் கூட்டணி பற்றிய பேச்சு எழும். நான் பாஜகவிற்கு எதிராக இருக்கும் பிம்பத்தை உருவாக்கி வருகிறேன். அந்த பிம்பம் முறிந்துவிட கூடாது. அதனால் அலுவலகத்தை பின்னர் திறக்கலாம்.. தேர்தல் முடியட்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications