ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. நான் அயோத்திக்கு போகமாட்டேன்.. காரணம் சொன்ன குஷ்பு
சென்னை: எல்லா மதத்தினரும் கொண்டாட வேண்டிய விழா தான் இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் என்று என்று பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான விஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆலயங்களையும் அவர் தூய்மை செய்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவினர் ஆலய தூய்மை பணியை செய்து வருகின்றனர். சென்னை ஆதிகேசவ பெருமாள் கோயிலில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்கள் சிலர், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பீர்களா என்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த குஷ்பு, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்க மாட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இங்கு இருக்கிறது. அதனால் அந்த விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை என்றார். உண்மையிலேயே அயோத்தியில் ராமர் கோயில் வர வேண்டும் என்று 500 ஆண்டுகாலமாக மக்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் மீண்டும் அயோத்திக்கு ராமர் வரப் போகிறார். ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ராமர் கோயிலை பொறுத்தவரைக்கும், இது சாதி, மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி கிடையாது. இது முழுக்க முழுக்க நம்முடைய ஒற்றுமையை காட்டக்கூடிய விழா என்றுதான் நான் நினைக்கிறேன்.
நாடு முழுவதுமே இந்து, முஸ்லிம், கிறிஸ்வர்கள் என எல்லோரும் வீடுகளில் விளக்கேற்றி ராமரை வரவேற்க காத்துக்கொண்டு உள்ளனர். அப்படி எல்லா மதத்தினரும் கொண்டாட வேண்டிய விழா தான் இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம்.
என்னோட அத்தை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்கள். 92 வயதாகும் என்னுடைய அத்தை பிரதமர் மோடியை சந்தித்து அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியதற்காக நன்றி தெரிவித்துள்ளார். ஒரு 92 வயதுள்ள பெண், ராமர் கோயில் வருவதை கொண்டாடுகிறார் என்றால் மற்றவர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்று பாருங்கள் என்று தெரிவித்தார் குஷ்பு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications