நான் புலி.. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா.. வீரலட்சுமி பாக்சிங் மோதல் பற்றி சீமான் பேச்சு
சென்னை: பாக்சிங்கிற்கு இடம், தேதியை அறிவித்து வீரலட்சுமி வீடியோ வெளியிட்ட நிலையில், நான் புலி.. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தால் அடுத்த திருப்பமாக சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. என் வாழ்க்கையில் வீரலட்சுமிக்கு எல்லாம் மன்னிப்பே இல்லை சீமான் காட்டமாக விமர்சித்தார். இந்த நிலையில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை வம்பிழுத்ததாக ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? என வீரலட்சுமியின் கணவர் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், வீரலட்சுமியின் கணவர் உங்களை போனில் மிரட்டியதாக சொல்லப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு சீமான் அளித்த பதிலில், அது பேசக் கூடாதுன்னு நீதிபதி சொல்லி இருக்காங்க.. பாக்சிங் அது சரிதான்.. அவரு பகல் நேரத்துல பேசுனா நாம பாக்சிங் போகலாம்..அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்" என்று பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், வீரலட்சுமி அண்மையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், பாக்சிங் செய்வதற்கும் இடம் தயராக இருப்பதாகவும் அடுத்த ஆண்டு தை காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும் உங்களுக்கும் (சீமான்) பாக்சிங் வைத்துக் கொள்ளலாம்' எனக் கூறியிருந்தார். சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே இவ்வாறாக வார்த்தை யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில்,இன்று இவ்விவகாரம் தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் கூறியதாவது:-
எல்லாரும் என்னிடம் அறிவுறுத்தியிருக்கிறது என்னவென்றால், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் வாயை மூடிக்கொண்டு போ என்கிறார்கள்.. பெரியவர்களாகிய நீங்க கேட்பதால் சொல்கிறேன்.. நான் புலி.. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் சண்டையிட போகுமா இல்லை அமைதியா செல்லுமா.. அதுமட்டும் யோசித்துக்கொள்ளுங்கள்.. தேவையில்லாமல் பேசுறாங்க.. சிவபெருமான் எழுதி கொடுத்த பாட்டை நக்கீரர் குறை சொல்வார்.. தருமி கேட்பார்..

பாட்டு எழுதி புகழ் பெறும் புலவர்களும் உண்டு.. பாட்டை குற்றம், குறை சொல்லி புகழ் பெறும் புலவர்களும் உண்டு. என்னையை எதிர்த்து பேசுவதால் உங்களுக்கு ஒரு அடையாளம் உண்டு. என்னை எதிர்க்க வேண்டிய தேவை, விமர்சித்து பேசுவதற்கு தேவை உங்களுக்கு இருக்கு. எனக்கு உங்களை எதிர்த்து பேசவேண்டிய, விமர்சித்து பேச தேவை இருக்கா?.. என்னை எதிர்க்கிறவர்கள் எல்லாம் எனக்கு எதிரி கிடையாது.
நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள் தான் எதிரி.. அவங்க தான் என் எதிரி.. இனிமேலா பிறந்து எனக்கு எதிரி வரப்போகிறான். நான் தீர்மானித்துவிட்டேன்.. என் எதிரி யார்?... என் இலக்கு எது?... என் பயணம் எவ்வளவு தூரம்?.. இதெல்லாம் வெற்று பேச்சு.. என்னை உங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு பேசுவது உங்களுக்கும் சிறுமை, எனக்கும் சிறுமை. என் வேலைக்கும் சிறுமை.. அதை விட்டுவிடுங்கள்.. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications