ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் ஈசானி ஆனந்த் அகில இந்திய அளவில் 79-வது இடத்தை பிடித்து ஐஏஏஸ் அதிகாரியாகி உள்ளார். 4-வது முயற்சியில் அவர் இந்த வெற்றியை எட்டி பிடித்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் மத்திய மாநில அரசுகளில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீசஸ் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் 4 முறையும், பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினர் 6 முறையும், ஓபிசி பிரிவினர் 9 முறையும், எஸ்சி எஸ்டி பிரிவினர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வுக்கு தயாராகலாம்.
கடந்த 2023ம் ஆண்டுக்கான அறிவிப்பில் 1,105 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது, முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 28-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள். தேர்வு முடிவு, அதற்கு அடுத்த மாதமே (ஜூன்) வெளியானது.
அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொண்டார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த தேர்வு நடந்தது. அந்த தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 844 பேர் தேர்ச்சி பெற்றார்கள். அதில் 134 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 9-ந்தேதி வரை நடந்து முடிந்தது. அதிலும் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது அதில் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்களின் பட்டியலையும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
முதலில் 1,105 காலிப்பணியிடங்கள் இருந்த நிலையில், அது தற்போது 1,143 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதில் 180 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள், 37 ஐ.எப்.எஸ். பணியிடங்கள், 200 ஐ.பி.எஸ். பணியிடங்கள் , 613 குரூப்-ஏ பணியிடங்கள், 112 குரூப்-பி பணிடயங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்..
அதாவது 1,016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் பொதுப்பிரிவில் 347 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு பிரிவில் 115 பேரும், ஓ.பி.சி. பிரிவில் 303 பேரும், எஸ்.சி. பிரிவில் 165 பேரும், எஸ்.டி. பிரிவில் 86 பேரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.
ஐஏஎஸ் தேர்வில் முதல் 3 இடங்களை ஆதித்யா ஸ்ரீவஸ்தவா, அனிமேஷ் பிரதான், டோனூரு அனன்யா ஆகியோர் பிடித்துள்ளார்கள்/ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 42 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் அகில இந்திய அளவில் 41-வது இடத்தை பிடித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்ராம், தமிழ்நாட்டில் முதல் நபராக தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 79-வது இடத்தை பிடித்திருக்கும் டாக்டர் எஸ்.பிரசாந்த் என்பவர், தன்னுடைய முதலாவது முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் பதவியை தட்டி பறித்துள்ளார்.
இதேபோல் தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை கமிஷனர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அதுல் ஆனந்தின் மகள் ஈசானி ஆனந்த் அகில இந்திய அளவில் 79-வது இடத்தை பெற்று சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர் ஆவார். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.எஸ். பணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் 79-வது இடத்தை பெற்று ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வாகி உள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் 180 இடங்களை பிடித்தவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாகவும் அதற்கு அடுத்ததாக ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணிகளில் மதிப்பெண் மற்றும் விருப்பம், தகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த எம்.சுபதர்ஷினி 83-வது இடத்தை ஐஏஏஸ் அதிகாரியாக தேர்வாகி உள்ளனார்.
கடந்த 2022-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 42 பேரும், 2021-ம் ஆண்டு 27 பேரும், 2020-ம் ஆண்டில் 36 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று அதிகாரிகளானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications