எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுகிறாரா? அதிமுக தலைமையை அமித்ஷா நீக்கினால்? விளைவுகள் படு மோசமாகிடும் போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அடுத்து என்ன செய்வார்? என்ற விவாதம் இணையத்தில் நடந்து வருகிறது.. அந்தவகையில், அதிமுக ஏற்கனவே கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற பிரச்சாரத்தை செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என நால்வருமே மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துவரும் நிலையில், பத்திரிகையாளர் மணி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "அதிமுக இனி ஒருங்கிணையுமா? என்றால் இதில் ஓபிஎஸ்ஸைதான் கவனிக்க வேண்டும்.. டிடிவி தினகரன் தனியாக கட்சி துவங்கி சென்றுவிட்டார். சசிகலாவை யாருமே கண்டுக்கல.. இப்போது செங்கோட்டையன் ஒருங்கிணைய குரல் கொடுத்தார்.

Amit Shah Edappadi Palaniswami Mukkulathor votes

எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையனை பொறுத்தவரை யார் கட்சியின் தலைவராக இருக்கிறார்களோ, அவர்களுக்குதான் விசுவாசமாக இருந்திருக்கிறார்.. அவர்களை மீறி அவர் நடந்து கொண்டதில்லை.. முதல்முறையாக இப்போதுதான் போர்க்குரல் எழுப்பினார். ஆனாலும், அதிமுக ஒருங்கிணைவது கடினமே.. நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களே..

அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டுவரும்போது, கடந்த ஏப்ரல் 11ம் தேதி, ஐந்து நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா தங்கியிருந்தார்.. அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.. இதை ஆரம்பத்தில் ஏற்க மறுத்த அமித்ஷா, பிறகு ஒப்புக் கொண்டுவிட்டார் என்றே சொல்கிறார்கள்.

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதுமே, செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசினாரே தவிர, எடப்பாடி பழனிசாமி பேசவில்லை..

அமித்ஷா சொன்ன வார்த்தை

அப்போது அமித்ஷாவிடம் செய்தியாளர்கள், அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்று கேட்டனர். அதற்கு அமித்ஷா, எந்த கட்சி உள்விவகாரத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை என்றார்.. (ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா கட்சி உள்விவகாரங்களிலும் பாஜக தலையிடவே செய்யும் என்பது வேறு விஷயம்)

இதற்கு பிறகு தமிழகத்தில் கூட்டாட்சி என்றார்கள்.. பிறகு எடப்பாடி தலைமையில்தான் கூட்டணி என்று நயினார் நாகேந்திரன் சொன்னதுமே, இதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.. ஆக, உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று அமித்ஷா சொல்லிவிட்ட நிலையில்தான், செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். எக்காரணம் கொண்டும் ஓபிஎஸ், சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பதில்லை என்பதிலும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்..

செங்கோட்டையன்

ஒருவேளை இவர்களை கட்சியில் இணைக்க வேண்டுமானால், பாஜக, எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும்.. எடப்பாடிக்கு பதிலாக வேறொருவரை அதிமுகவின் தலைவராக கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல..

காரணம், எடப்பாடியை செங்கோட்டையன் மட்டுமே எதிர்த்துள்ளாரே வேறு யாருமே எடப்பாடியை விட்டுக்கொடுக்கவில்லை.. எனவே அதிமுக இன்னமும் எடப்பாடி பழனிசாமி கையில்தான் உள்ளதால், அவரை மாற்றுவதற்கு பாஜக எந்த மாற்றத்தையும் செய்யாது.

ஒருவேளை அழுத்தம் தந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமைப்பொறுப்பில் இருந்து பாஜக நீக்கினால், அது பாஜகவுக்கே மேலும் கெட்டப்பெயரை தந்துவிடும்.. எனவே அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பு மிக மிக குறைவு..

முக்குலத்தோர் வாக்குகள்

அதேசமயம், தென்மாவட்டங்களில் அதிமுக தன்னுடைய வாக்கு சதவீதத்தை இழக்கலாம்.. காரணம், கடந்த முறை தேர்தலில் ஓபிஎஸ் தனியாகவும், டிடிவி தினகரன் தனியாகவும் தேர்தலை சந்தித்திருந்தனர்..

ஆனால் இந்த முறை, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என எல்லாருமே சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளதால், முக்குலத்தோர் வாக்குகளை கணிசமாக பெறுவார்கள்.. எனவே ஏதாவது ஒரு ரூபத்தில் 20 முதல் 30 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு இது சிக்கலையே தரும்.

அதுமட்டுமல்ல, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் இவர்களின் நோக்கம், தாங்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்பதல்ல, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதை தடுப்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது.. இதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.. இன்னொருமுறை திமுக ஆட்சிக்கு வந்தாலும் இவர்களுக்கு கவலை கிடையாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+