Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண் குழந்தை பிறந்தால் முதல்வரின் பெயர் வைப்பேன்..சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் ஆண் குழந்தை பிறந்தால் முதல்வரின் பெயர் வைப்பேன் என்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

If I give birth to a boy will name him M.K. Stalin says Pregnant woman in perambalur

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறுகையில், "தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில், பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படும் நிகழ்ச்சி சிறப்பான திட்டமாகும். ஏழை, எளிய வீட்டு கர்ப்பிணிகளுக்கு அரசின் செலவில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு அவர்களது வீட்டில் எவ்வளவு சிறப்பாக வளைகாப்பு நடத்தப்படுமோ அதை விட சிறப்பாக அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து அனைத்து சம்பிரதாயங்களும் செய்யப்பட்டு வெகு விமரிசையாக சமுதாய வளை காப்பை அரசு கொண்டாடி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

If I give birth to a boy will name him M.K. Stalin says Pregnant woman in perambalur

பெண்கள் கல்லூரியில் படிக்கும் போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற சிறப்பான திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

If I give birth to a boy will name him M.K. Stalin says Pregnant woman in perambalur

இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டம் அரும்பவூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

இலவச பேருந்து வசதி, பெண்கள் உரிமை தொகை திட்டம். இது போன்ற நிறைய திட்டங்கள் செய்கிறார். இந்த திட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு உதவியாக உள்ளது. எனக்கு பொண்ணு பிறந்தாலும் பையன் பிறந்தாலும் மிகவும் மகிழ்ச்சிதான். எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் தமிழக முதல்வரின் பெயரை வைப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+