கோயம்பேட்டில் லூலூ மால் வந்தால்.. சும்மா விடமாட்டோம்.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்த அன்புமணி
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும். அங்கு லூலூ மால் கொண்டு வரப்போவதாக சொல்கிறார்கள். அப்படி ஏதாவது மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாமக சார்பில் வெளியிடப்பட்ட நிழல் பட்ஜெட் விளக்க கூட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி

ராமதாஸ் பங்கேற்று பாமகவின் நிழல் பட்ஜெட்க்கும் தமிழக அரசு வெளியிட்ட நிஜ பட்ஜெட்க்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து விரிவாக பேசினார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் பேசும்போது கூறியதாவது:
இங்கிலாந்து நாட்டில் நிழல் பட்ஜெட் போடும் வழக்கம் உள்ளது அதாவது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நிழல் பட்ஜெட் போடுவார்கள் எப்படி ஆளும்
தரப்பில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக அமைச்சர்கள் இருக்கிறார்களோ அதே போல எதிர்க்கட்சியில் வரிசையில் இருப்பவர்களும் நிழல்
அமைச்சர்கள் ஒவ்வொரு துறைக்கும் இருப்பார்கள் ஆளும் தரப்பு பட்ஜெட் போடுவதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சி 'ஷேடோ
பட்ஜெட்' அதாவது நிழல் பட்ஜெட்டை வெளியிடுவார்கள். அங்குள்ள அரசு அதிகாரிகளை எதிர்க்கட்சியினர் சந்தித்து புள்ளி விவரங்களை கேட்டால்
அவர்கள் அனைத்து விவரங்களையும் கொடுப்பார்கள்.
நம்முடைய ஊரில் இருப்பது போல அதிகாரிகள் மறுக்க மாட்டார்கள்.
அதே பாணியில் தான் நம்முடைய ஊரில் பாமக சார்பில் ஒவ்வொரு ஆண்டும்
நிழல் பட்ஜெட்டை நாங்கள் வெளியிட்டு வருகிறோம்.
பாமக போடும் நிழல் பட்ஜெட் தமிழ்நாடு அரசு போடும் பட்ஜெட்டை விட சிறந்த பட்ஜெட். இந்த
நிழல் பட்ஜெட் போல நூற்றுக்கணக்கான ஆவணங்களை பாமக சார்பில் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
பாமகவை தவிர மற்ற எந்த கட்சி யாவது
தமிழ்நாட்டில் நிழல் பட்ஜெட்டோ அல்லது மற்ற ஆவணங்களோ வெளியிட்டது உண்டா.?
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எந்த விஷயத்திற்காவது மற்ற கட்சிகள் ஆவணங்களை வெளியிட்டது உண்டா ? எழில்மிகு சென்னை, சிங்காரச் சென்னை என்று விதவிதமாக பெயர் மாற்றுகிறார்கள் ஆனால் சென்னை வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறிக் கொண்டுள்ளது. சென்னையில் ஒரு மழை வந்தால் உடனே அமைச்சர்கள் போன் செய்து அதிகாரிகளை போட் தயார் செய்ய சொல்கிறார்கள் அப்படியானால் 60 ஆண்டுகளாக நீங்கள் என்னதான் செய்தீர்கள்..?
60 ஆண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் சென்னைக்கு என்னதான் அடிப்படை கட்டமைப்பை வசதியை உருவாக்கினார்கள். 1050மிமீ சென்னையில் ஆண்டுதோறும் மழை பெய்கிறது அதில் 900 மில்லி மீட்டர் வீணாக கடலுக்கு செல்கிறது. பெய்த மழை நீரை கடலுக்கு அனுப்பிவிட்டு பிறகு கடலில் இருந்து குடிநீரை எடுக்கிறார்களாம் அதற்கு 30ஆயிரம் கோடி செலவு செய்கிறார்கள் அதிபுத்திசாலிகள். கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி 65 ஏக்கர் இடம் உள்ளது.
அந்த இடத்தில் ஒரு பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைத்தோம்... அந்த பூங்காவை அமைத்தால் நடைப்பயிற்சி செல்வோர் உள்ளிட்ட 10 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்... பசுமை பூங்காவிற்கு பதிலாக அங்கு லூலூ மால் கொண்டு வரப் போவதாக சொல்கிறார்கள் அப்படி ஏதாவது மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது வெறும் வார்த்தைக்காக சொல்வது அல்ல நிச்சயம் நாங்கள் இதை சும்மா விட மட்டோம்'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
சென்னையின் முக்கிய பஸ் நிலையமாக கோயம்பேடு இருந்தது. தற்போது அந்த பஸ் நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் கோயம்பேடு பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில் லூலூ மால் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த எச்சரிக்கையை செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications