Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்னி பேருந்துகளின் ‘தீபாவளி’ வசூல் வேட்டை? இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்.. அமைச்சர் முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்து புகார் எண்களையும் வெளியிட்டுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.

நாடு முழுவதும் வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

If Omni bus collect fare high can complaint, announces minister ss sivashankar

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், நாள்தோறும் 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, நவம்பர் 13ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,467 பேருந்துகள், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் மட்டும் கோயம்பேடிலிருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங் ரோடு (Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து, கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாதவரம் புதிய பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி நகர் மாநகர பேருந்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம், டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்?: இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்யும்பொருட்டு முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் http://www.tnstc.in போன்ற இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவரை 68 ஆயிரம் பயணிகள் பேருந்தில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட ஆம்னி பேருந்துகளை தணிக்கை செய்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளியின் போது எப்படி கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இயக்கினார்களோ அதே போல் இயக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளோம்.

புகார் எண்கள்: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு, 1800 425 6151 (Toll Free Number) 044-24749002, 044-26280445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவேண்டும்" என அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+