Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது பொங்கலுக்கு 9 நாட்கள் லீவா? இது நடந்தால் கன்பார்ம்! அரசு மனசு வைக்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ள நிலையில், ஜனவரி 13 ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அறிவித்தால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுக்குமா? என்ற எதிபார்ப்பு அரசு ஊழியர்கள், பெற்றோர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைகளில் முதன்மையானது பொங்கல் பண்டிகை. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடவே விரும்புவார்கள். இதற்காக பல மாதங்களுக்கு முன்பே ரயில், பஸ்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

pongal 2025 government holiday tamil nadu government 2025

பொங்கல் பண்டிகை

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கம் போல சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டால் அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை விட வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கூறுகையில், "தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள்.

தமிழக அரசு அறிவிப்பு

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் ஸ்டாலின், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு 9 நாட்கள் லீவ் கிடைக்குமா?

அரசின் இந்த உத்தரவால் பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதேவேளையில், 13 ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால் அன்று மட்டும் விடுமுறை அறிவித்தால் முந்தய நாட்களான ஞாயிற்றுகிழமை மற்றும் சனிக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்கள் 2 என மொத்தமாக 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது.

எனவே, வரும் 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) போகிப் பண்டிகைக்கும் அரசு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே எழுந்துள்ளது. 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது போலவே வரும் 13 ஆம் தேதி போகிப்பண்டிகை அன்றும் விடுமுறை அளித்து அரசு இன்ப அதிர்ச்சி கொடுக்குமா? என்ற எதிபார்ப்பு அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+