அதிமுக கூட்டணியில் தவெகவுக்கு 50+ தொகுதிகள்! எந்தெந்த மாவட்டங்களில் விஜய் 'ஸ்ட்ராங்ஹோல்டு' தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வேளை அதிமுகவுடன் தவெக கூட்டணிக்குச் சென்றால் எத்தனை தொகுதிகளை கேட்கும், அவ்வாறு கேட்பதற்கு தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் விஜய் கட்சி செல்வாக்குடன் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளிலேயே இத்தனை செல்வாக்கு அதிகரித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளன.

tvk vijay tamil nadu assembly election 2026 2026

அந்த இளைஞர் படையை வைத்து விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் அதிக கூட்டத்தை காட்டி மற்ற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்கிறார்கள். என்னதான் எங்கள் கட்சியை அழிக்க எந்த கொம்பனும் இல்லை, எங்கள் கட்சியை வெல்ல யாருக்கும் தகுதி இல்லை என மற்ற கட்சிகள் கூறிவந்தாலும் அக்கட்சிகளுக்குள் விஜய்யின் வளர்ச்சி சற்று உறுத்தலாகவே இருக்கிறது என சொல்லலாம்.

விஜய் செல்லும் இடங்கள்

விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதை பார்க்கும் போது அவருக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. கரூர் சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். விஜய் அந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்கவே இல்லை.

கோபமே இல்லை

எனினும் அவர் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறி வருகிறார். அப்போது கூட ஒருவரும் விஜய்யிடம் கோபமாக பேசவில்லை என்கிறார்கள்.

சிறுவன் காயம்

அது போல் இந்த சம்பவத்தில் காயமடைந்து கடைசி ஆளாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சிறுவனின் தந்தை அளித்த பேட்டியில், சிறுவன் தாய்மாமாவுடன் விஜய் கூட்டத்திற்கு சென்றார். எனக்கு விஜய் வருவதே தெரியாது. மாலைக்கு மேல்தான் அவர் வருவது தெரியும்.

தந்தையின் தக் லைப் பதில்

கூட்ட நெரிசலால் பிளக்ஸ் மீது ஏறிய போது நிறைய பேர் அதில் ஏறியதில் பாரம் தாளாமல் கீழே விழுந்துவிட்டதாம். அதில் சிறுவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது என்றார். அப்போது நெறியாளர், அந்த தந்தையிடம், "விஜய் வருவது தெரிந்திருந்தால் உங்கள் மகனை அனுப்பியிருக்க மாட்டீங்களா?" என கேட்டதற்கு பதறிய அந்த தந்தை, "ஹாங்! நானும் போயிருப்பேன்" என்றார். சிறுவன் சிரிக்கிறார். இப்படி விஜய் மீது மக்கள் அன்பு செலுத்தி வருகிறார்கள்.

விஜய் கூட்டணி

இந்த நிலையில் விஜய் அதிமுகவுடன் கூட்டணிக்குச் செல்வார் என சொல்லப்படுகிறது. ஒரு வேளை விஜய் அதிமுகவுக்கு சென்றால் அவர் கூடுதலாக தொகுதிகளை கேட்க எந்தெந்த மாவட்டங்களில் தவெகவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

திருச்சி

திருச்சியில் தவெகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. இதை அங்கு விஜய் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போதே தெரிந்திருக்கும். திமுகவுக்கு நேரடியாக சவால் விடுக்கும் நிலையில் விஜய்க்கு செல்வாக்கு இருக்கிறது. மாநில அரசியலில் திருச்சிக்கு முக்கிய பங்கு இருக்கும் நிலையில் அந்த மாவட்டத்தை தவெக கேட்டு பெறும் என சொல்லப்படுகிறது.

அரியலூர், பெரம்பலூர்

அது போல் திருச்சியை சுற்றியுள்ள அரியலூர், பெரம்பலூரிலும் விஜய் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. இங்கு அவர் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் கூடிய கூட்டமே சாட்சி!

மதுரை

கோயில் நகரமான மதுரையிலும் விஜய்யின் செல்வாக்குக்கு எந்த குறைவும் இல்லை. மதுரை கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மதுரை பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மதுரையில் உள்ள தொகுதிகளை வெல்ல வியூகம் வகுத்து அடிக்கலாம் என தவெக முடிவு செய்துள்ளது.

வடதமிழக மாவட்டங்கள்

வடதமிழக மாவட்டங்களான தருமபுரி, கடலூர், விழுப்புரம் ஆகியவற்றில் வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கு தவெகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த தொகுதிகளிலும் தவெக அதிக சீட்டுகளை கேட்கலாம்.

சென்னை- கோவை

சென்னை, கோவை ஆகிய தொழில் நகரங்களில் தவெக நகர்ப்புற இளைஞர்களையும் முதல் வாக்காளர்களையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். முக்கிய மாவட்ட நகரங்களில் விஜய் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது.

50 தொகுதிகள்

தமிழக வெற்றிக் கழகம் மாநிலம் முழுவதும் பூத் கமிட்டிகளை உருவாக்கி அதற்கு பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பு அடிமட்டத்திலும் வலுவாக இருப்பதையே காட்டுகிறது. இதனால் 50 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெற தவெக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. என்னதான் கூட்டணி குறித்து பேசுவதற்கு தவெகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாவிட்டாலும் (தலைமறைவு) இன்னும் தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் இருந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+