ஆண்மையிருந்தால் கோர்ட்டுக்கு போங்க.. கேஸ் போடுங்க.. அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி பரபர சவால்!
சென்னை: ஆண்மையிருந்தால் திமுகவினருக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தை அணுகட்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச்செயலார் ஆர்.எஸ்.பாரதி சவால் விட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் பாஜக அண்ணாமலை. தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிராக போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை புகார் கொடுத்தார்.
அதேபோல் தமிழ்நாடு உள்துறைச் செயலாளரிடம் அண்ணாமலை புகார் கொடுத்தார். இந்த நிலையில் பாஸ்போர்ட் தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி. ஆர் சுவாமி நாதன், ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டார்.
ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் ஆசிர்வாதம் நேர்மையானவர் என நான் சான்று அளிக்கிறேன். அதே சமயம் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்த அண்ணாமலையை பாராட்டுகிறேன் என்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி. ஆர் சுவாமி நாதன் உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ் பாரதி பேட்டி அளித்தார்.

அண்ணாமலை பற்றி கேள்வி
அண்ணாமலை கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்? அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று ஆர். எஸ் பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆர். எஸ் பாரதி அளித்த பதிலில், நான் சவால்விட்டு சொல்கிறேன்.. உங்கள் மூலமாக அவரிடம் சொல்கிறேன். நான் எதிர்க்கட்சியாக இருந்த போது ஜெயலலிதா மீது கேஸ் போட்டேன். 1991ம் ஆண்டிலேயே டான்சி வழக்கை தொடுத்தேன். அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதே வழக்கு தொடுத்து தண்டனை பெற வைத்தேன்.

சவால்
யார் எங்கள் மீது புகார் வைக்கிறார்களோ.. அவர்களுக்கு துணிச்சல் இருந்தால் , தைரியம் இருந்தால் வழக்கு போடட்டும். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறேன். உங்களுக்கு ஆண்மை இருந்தால் கோர்ட்டுக்கு செல்லுங்கள்,. பாஸ்போர்ட் ஊழல் என்று சொன்னாரே அண்ணாமலை. அதில் உயர் நீதிமன்றம் கூட அண்ணாமலையை பாராட்டியது. ஆனால் அவர் சொன்ன ஊழல் பொய் என்று அதே நீதிபதி சொல்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை என்ன அதிகாரி மீது ஊழல் புகார் சொன்னாரோ, அவர் ஊழல் செய்யவில்லை நீதிபதியே கிளீன் சீட் கொடுக்கிறார். ஆனால் அதே நீதிபதி அண்ணாமலையை பாராட்டுகிறார். நான் இன்னும் சவால் விட்டு சொல்கிறேன். யார் வேண்டுமானாலும் போங்க.. நீதிமன்றம் போங்க. கேஸ் போடுங்க. நீதிமன்றம்தான் நீதியை நிலைநாட்டும். நீதிமன்றம்தான் உண்மையை கொண்டு வரும். நீதிமன்றம் செல்லுங்கள். வழக்கு தொடுங்கள். நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம்.

ஆணாக இருந்தால்?
எதிர்க்கட்சி மீது நாங்கள் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் மாஜி அமைச்சர்கள் மீது இப்போது வழக்கு போடவில்லை. நாங்கள் போன ஆட்சியிலேயே வழக்கு போட்டோம். எடப்பாடி, வேலுமணி மீது போட்ட வழக்கெல்லாம் போன ஆட்சியிலேயே போட்ட வழக்கு என்பதை மறக்க வேண்டாம். இதில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும். விசாரணை நடந்து வருகிறது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ் பாரதி தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications