சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் மேல் நீங்க சொன்ன புகார் பொய் என்றால் பதவி விலகுகிறீர்களா..? முதல்வருக்கு துரைமுருகன் சவால்

Google Oneindia Tamil News

Recommended Video

    புகார் பொய் என்றால் பதவி விலகுகிறீர்களா..? முதல்வருக்கு துரைமுருகன் சவால்

    சென்னை; தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தம்மீது புளுகு மூட்டைகளை கொட்டியிருப்பதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

    துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியதாக சூலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பேசியிருந்தார்.

    If you complaint about a lie, do you resign? Duramurugan challenged the chief minister

    இதற்கு மறுப்பு தெரிவித்து துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் 13 கோடி ரூபாய் பணம் மற்றும் 12 கிலோ தங்கம் கைப்பற்றியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

    தமது வீடு மற்றும் கல்லூரியில் நடத்திய சோதனைக்கு பின் வருமானவரித்துறையினர் அவர்கள் எடுத்துச் சென்றது பத்து லட்சம் ரூபாய் மட்டுமே என்று துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

    பொன்பரப்பியில் நடந்தது ஜாதிச் சண்டை இல்லைங்க.. இரு கட்சிகளுக்கிடையிலான பிரச்சினை.. எச். ராஜா! பொன்பரப்பியில் நடந்தது ஜாதிச் சண்டை இல்லைங்க.. இரு கட்சிகளுக்கிடையிலான பிரச்சினை.. எச். ராஜா!

    எடப்பாடி கூறியுள்ள ரூபாய் 13 கோடி கைப்பற்ற இடம் தங்களுக்கான இடம் அல்ல என்று குறிப்பிட்டுள்ள துரைமுருகன், எங்கள் இடங்களில் நடைபெற்ற சோதனையில் தங்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை வருமான வரித்துறை அளித்துள்ள பஞ்சன் நாமாவை பார்த்தாலே அறிந்துகொள்ள முடியும். இதுதான் உண்மை.

    எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் இடத்தில் இருக்கும் பழனிச்சாமி ஏதும் தெரியாத சராசரி மனிதனைப் போல பேசியிருப்பது கேலிக்குரியதாக உள்ளது. என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார், அதுபோல அவர் குற்றச்சாட்டு தவறு என்றால் அவர் பதவி விலகுவாரா என துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

    English summary
    DMK treasurer Duraimurugan has said that the Chief Minister Edappadi Palinasamy has poured the bundles lie on him in the election campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X