அரசுப்பள்ளி டூ ஐஐடி! கேண்டீன் ஊழியர் வறுமையை வென்று சாதித்துக்காட்டிய சென்னை மாணவர்.. சபாஷ்
சென்னை: கல்வி என்னும் ஆயுதத்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சென்னையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி-யில் (Chennai IIT) உள்ள கேண்டீனில் பணியாற்றி வரும் பெண்ணின் மகன அதே ஐஐடியில் படிக்க சீட் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளியில் படித்து சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவராக சேர்ந்தது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கல்வி என்னும் ஆயுதத்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதை பல தருணங்களில் நம் மாணவர் - மாணவிகள் நிரூபித்து வருகிறார்கள். மிகவும் ஏழ்மையான சூழல், மலைப்பகுதி கிராமங்களில் வசித்தாலும் கூட தங்கள் கடின உழைப்பால் உயரிய கல்வி நிறுவனங்களில், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளையும் அடைந்து ஊரையே பெருமைப் பட வைக்கும் நிகழ்வுகளை பார்க்க முடிகிறது.

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்
அந்த வகையில்தான் தற்போது ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்:-
நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கக்கூடியது சென்னை ஐ.ஐ.டி. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் - மாணவிகள் ஐ.ஐ.டி-யில் படித்து வருகிறார்கள்.
ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் படிக்க, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த 28 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த 28 மாணவர்களில் 5 பேர் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்தவர்கள் ஆவர்.
கேண்டீன் ஒப்பந்த ஊழியர்
இதில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கவுரிசங்கர் என்ற மாணவரும் ஒருவர். இந்த மாணவரின் தாயாரான கலைவாணி (வயது 44) என்பவர் சென்னை ஐ.ஐ.டி-யில் உள்ள கேண்டீனில் பணியாற்றி வருகிறார். ஒப்பந்த ஊழியராக கேண்டீனில் பணியாற்றி வரும் கலைவாணியின் மகன், அதே ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவராக சேர்ந்தது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இது குறித்து மாணவர் கவுரிசங்கர் கூறியதாவது:- "நாங்கள் மிகவும் ஏழ்மையான சூழலில் வளர்ந்ததால், டியூஷன் எதுவும் செல்லவில்லை. ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கு தயார் ஆவதற்கும் நான் பயிற்சி மையம் செல்லவில்லை. எனது ஆசிரியர்கள் எனக்கு நன்றாக வழிகாட்டினார்கள். பிளஸ் 2-வில் 85 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தேன்.
கடின உழைப்பு தான் காரணம்
எனக்கு ஐ.ஐ.டி-யில் படிக்க இடம் கிடைத்தது என்பதை எனது தாயாரால் இன்னும் நம்ப முடியவில்லை. எனக்கு ஐ.ஐ.டி-யில் இடம் கிடைத்தது, எனது தாயார் அங்கு கேண்டீன் ஊழியராக பணியாற்றுவதும் தற்செயலாக நடைபெற்ற ஒன்றே. எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையாகவே இதை உணர்கிறேன்." என்று கூறினார்.
கவுரிசங்கரின் தாயார் கலைவாணி கூறுகையில், "சென்னை ஐ.ஐ.டி-யில் முதலாம் ஆண்டு படிக்க எனது மகன் கவுரிசங்கருக்கு இடம் கிடைத்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனது மகனின் வெற்றிக்கு அவனது கடின உழைப்பே காரணமாகும்" என்றார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications