மீண்டும் வெடிக்கும் சென்னை ஐஐடி மர்ம மரணங்கள் விவகாரம்.. மணி கட்டப் போவது யாராம்? எப்போதாம்?
சென்னை ஐஐடியில்தான் நாட்டிலேயே அதிக மாணவர்கள் மரணம் அடைந்து வருகின்றனர்.
சென்னை: நாட்டின் ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தொடர்ந்து மரணமடைவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி (ஐஐடி மெட்ராஸ்) கல்வி நிறுவனத்தில் ஒரே மாதத்தில் 2-வது மாணவர் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் ஐஐடி முதன்மையான இடத்தில் உள்ளது. ஆனால் ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன என்பது குற்றச்சாட்டு.

நாட்டின் ஐஐடி கல்வி நிறுவனங்களில் கடந்த சில ஆன்டுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மெட்ராஸ் ஐஐடி எனப்படும் சென்னை ஐஐடியில்தான் அதிகபட்சமாக 15-க்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒவ்வொரு மரணமும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும்தான் உருவாக்குகிறதே தவிர தீர்வு கிடைக்கவில்லை.
2018-ல் கேரளா மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது வருகை பதிவேடு குறைவு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல உபி மாணவர், முதுகலை தொழில்நுட்பம் படித்தவர். அவரும் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இதேபோல் பேராசிரியர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.
2019-ல் மாணவி பாத்திமா லத்தீப் மர்ணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி பாத்திமா மரணத்தில் பேராசிரியர் ஒருவர் பெயர் அடிபட்ட போதும் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை. நடவடிக்கைகளில் இருந்து தப்பினார். ஒடிஷாவைச் சேர்ந்த சேகர் திவாரி என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

2016-ம் ஆண்டு மட்டும் 3 மாணவர்கள், சென்னை ஐஐடி வளாகத்தில் மரணம் அடைந்தனர். இந்த ஆண்டு ஒரே மாதத்தில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 2023-ம் ஆண்டில் தற்போது வரை 3 மாணவர்கள் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களிலேயே இத்தகைய மரணங்கள், மர்ம மரணங்கள், தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய கல்வி நிறுவனங்களில் கட்டுப்படுத்தப்பட முடியாத ஜாதிய, மத ரீதியான ஒடுக்குமுறை நீடித்து கொண்டிருக்கிறது. இத்தகைய ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படும் போதுதான் மாணவர்கள், பேராசிரியர்கள் மரணங்கள் விவகாரம் ஓயும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications