பாலு எங்க போன?.. எழுந்துவான்னு சொன்னேன் நீ கேட்கலை.. வார்த்தை வராமல் ஸ்தம்பித்து நின்ற இளையராஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலு எங்க போன, எழுந்துவா என்றேன் நீ கேட்கவில்லை என இளையராஜா மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து இளையராஜா தனது வீடியோவில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில் பாலு சீக்கிரம் எழுந்து வா. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என நான் சொன்னேன்.

நீ கேட்கவில்லை. போய்விட்டாய். எங்க போன? கந்தவர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா? இங்க உலகம் ஒரு சூனியமாகிவிட்டது. பேசுவதற்கு பேச்சு வரவில்லை. சொல்வதற்கு வார்த்தையில்லை. என்ன சொல்வது என தெரியவில்லை.

இரங்கல்

இரங்கல்

எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதுக்கு அளவு இல்லை என மிகவும் உருக்கமாக இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்பிபி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று மாரடைப்பால் காலமானார்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் ரசிகர்கள், திரைத்துறையினர் பிரார்த்தனை செய்தனர்.

எஸ்பிபி

எஸ்பிபி

எஸ்பிபியுடன் இத்தனை ஆண்டுகாலம் பயணித்த இளையராஜா அவர் மீண்டு வர வேண்டும் என உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் இளையராஜா கூறுகையில் பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.

நன்றாக அறிவேன்

நன்றாக அறிவேன்

அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதுபோல உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போதும் அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன்.

திரும்பி வருவாய்

அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா என்று பேசியுள்ளார். சீக்கிரம் வா என கூறிய இளையராஜா கூறியநிலையில் நான் கூப்பிட்டும் நீ கேட்கவில்லை என தற்போது உருக்கமாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+