”தலித்” என்று அழைத்ததால் ஆவேசம்.. வழக்கு தொடர்ந்த இளையராஜா - ஒரு பிளாஷ்பேக்
சென்னை: எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளார் இளையராஜாவை தலித் என மத்திய அரசும் பாஜகவும் அடையாளப்படுத்தி இருக்கும் நிலையில், தன்னை தலித் என்று அழைத்ததற்காக எழுத்தாளர் கே.ஏ.குணசேகரன் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தது தற்போது பலரால் நினைவுகூறப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்தியாவின் மூத்த முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், இந்தி என ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் 7000 க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பாஜக கொடுத்த அறிமுகம்
இந்த நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் இளையராஜா. தனது பணியின்போது எண்ணிலடங்காத தடைகளையும், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் சந்தித்தவர். அனைத்து கஷ்டங்களையும் கடந்து தலைசிறந்த இசையமைப்பாளராக திகழ்கிறார் இளையராஜா.

தலித் என்ற அடையாளம்
இதேபோல் 4 நியமன எம்.பிக்கள் தொடர்பாக வெளியான அரசு அறிக்கையிலும், பெண் என பிடி உஷாவையும், தலித் என இளையராஜாவையும், ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர் என வீரேந்திர ஹெக்கடேவையும் குறிப்பிட்டு உள்ளனர். இசையுலகின் ஜாம்பவானாக திகழும் இளையராஜாவை குறிப்பிட்ட சாதிக்குள் அடைத்து அதன் அடிப்படையில் எம்.பி. பதவி வழங்குவதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வழக்கு தொடர்ந்த இளையராஜா
நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்ற பிரபல நாடக நடிகரும் இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தலித் முரசு என்ற இதழில் கடந்த 2001 ஆம் ஆண்டில் இளையராஜா குறித்த கட்டுரைத் தொடரை எழுதினார். "தலித் இசைக் கருவிகளை திரையில் பயன்படுத்திய முன்னோடி" என்று இளையராஜாவை அவர் அதில் புகழ்ந்திருந்தார். தலித் என்று தான் அடையாளப்படுத்துவதை விரும்பாத இளையராஜா கே.ஏ.குணசேகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

புத்தகத்துக்கு தடை
கே.ஏ.குணசேகரன் எழுதிய கட்டுரைத் தொடர் புத்தகமாக தயாரானபோது அது வெளியே வரக்கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் இளையராஜா தடை ஆணை பெற்றார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை காரணமாக முற்போக்காளர்கள் அப்போது அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் தன்னை தலித் என்று அடையாளப்படுத்தி வழங்கப்படும் எம்.பி. பதவிக்கு இளையராஜா நன்றி கூறி இருப்பதை சுட்டிக்காட்டி பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications