Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புறம்போக்கு நிலத்தை விடுங்க.. அதென்ன பீமா பட்டா? நிலம் வாங்கும்போது "B Memo Land" நோட்டீஸ் கவனியுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலம் வாங்க போறீங்களா? பட்டாக்களில் எத்தனையோ வகைகள் உண்டு.. அதில் "B Memo பட்டா" என்ற ஒருவகையுண்டு.. இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

B Memo-வை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, புறம்போக்கு நிலங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.. புறம்போக்கு நிலங்கள் அரசுக்கு சொந்தமானதாகும்.. தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு போன்று, பொதுப்பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகளை புறம்போக்கு நிலங்கள் என்கிறோம்.

Squatter Lands Tamil Nadu Government TN Government patta

புறம்போக்கு நிலம்: இவைகளில் விவசாயம் செய்யமுடியாது என்றாலும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும், இப்படி புறம்போக்கு இடங்கள் அரசால் ஒதுக்கப்பட்டிருக்கும்.. சாலைகளின் இருபுறமும் உள்ளதே புறம்போக்கு நிலமாக உள்ளது.. போக்குவரத்திற்கு புறமாக உள்ள நிலமாகும்..

இது அல்லாமல் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், அணைகள், மலைகள், குன்றுகள் அருகேயும் புறம்போக்கு நிலங்கள் இருக்கும். இந்த நிலங்களுக்கு புல எண்களும் இருக்கும். இவைகளில் ஆறு, ஏரி, கால்வாய், அணைகள் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் மலைகள், குன்றுகள் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் வருவாய் துறை, வனத்துறையின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
நோட்டீஸ்: வருவாய் துறை, பொதுப்பணித்துறை நிலங்களை ஒருவர் அனுபவித்து வந்தால் அதற்கு தண்டத்தொகை வசூலிக்கப்படும். இதில் ஒன்றுதான் B மெமோ.. இது ஒரு ஆவணம் கிடையாது.. அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி வாழக்கூடியவர்கள் அல்லது ஏதாவது ஒரு நோக்கமாக அங்கேயே குடிபெயர்பவர்களுக்கு "B memo" நோட்டீஸ் அனுப்பப்பட்டும்..

சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு இடத்தில் அதிகமான வருடங்கள் இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால், அந்த இடத்தினை கட்டாயம் காலி செய்ய வேண்டும் என்று அரசாங்க தரப்பில் நோட்டிஸ்தான் B Memo எனப்படும்.. இந்த B memo நோட்டீஸ் தந்து, அவர்களை வெளியே போக சொல்வார்கள். இதுதான் பின்னாளில் "பீமா பட்டா" என்றாகிவிட்டது.

அதேபோல, நிலம் வாங்கும்போது B memo பட்டா நிலம் விற்பனைக்கு வந்தால் அதை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.. அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அரசு தரப்பில் தரப்படும் நோட்டீஸ் என்பதால் அதை வாங்காமல் தவிர்த்துவிடலாம்.. அந்த நிலத்தில் குடியிருப்பவர்களும் எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.

அரசாங்கம்: அதேபோல, B மெமோ போன்ற ரசீதுகளை வைத்திருப்போர் புறம்போக்கு நிலத்தின் மீது உரிமை கோரி நீதிமன்றம் செல்லலாம். ஆனால் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அல்லது அரசுத் திட்டங்களுக்குத் தேவைப்படுவதாக இருந்தால் இந்த நிலங்களை அரசாங்கமே எடுத்துக்கொள்ளுமாம்..

அதேபோல, பழங்குடியினர், மலைச்சாதியினர் போன்றோர் புறம்போக்கு நிலத்தில் வசித்தாலும் அவர்களுக்கு அந்த நிலத்திற்கு உரிமை வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+