வீடு, நிலம் ரிஜிஸ்டர் செய்ய போறீங்களா? உடனே இதை படிங்க.. பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை மண்டலத்தில் சார்பதிவாளர்கள் டெபுடேஷன் (பகராண்மை) முறையில் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக பதிவுத்துறை முக்கியமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
பதிவுத்துறை சார்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், 2023 ஜுலை மாத முதல் வாரத்தில் பதிவுத்துறையில் சென்னை மண்டலத்தில் பணியாற்றி வந்த அனைத்து சார்பதிவாளர் அலுவலர்களும் மாற்றப்பட்டு புதிதாக சார்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர். பல வருடங்களாகத் தொடர்ந்து சென்னையிலேயே பல சார்பதிவாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் பல புகார்களும் தொடர்ந்து பெறப்பட்டு வந்தன.

எனவே நிர்வாக நலன் கருதி சென்னை மண்டலத்தின் அனைத்து சார்பதிவாளர்களும் முழுமையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எந்தவித இடையூறோ வெளி அழுத்தமோ இன்றி வெளிப்படையான முறையில் பொதுமக்கள் நலன் மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து சார்பதிவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
சென்னை மண்டலத்தில் குறிப்பிட்ட இருபத்து மூன்று இடங்கள் பகராண்மையில் (டெபுடேஷன்) மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்பது போன்றும் ஒரு சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் தவறான கருத்தாகும். இதற்கென ஒரு நிர்வாக காரணம் தனியே உள்ளது. சென்னையில் உள்ள இருபது சார்பதிவாளர் அலுவலகங்களில் மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே சார்பதிவாளர்களாக பணியாற்ற ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள 54 பதிவு மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு பணியிடங்கள் மாவட்ட பதிவாளர்களுக்கென உள்ளன. ஒன்று மாவட்ட பதிவாளர் நிர்வாகம்; மற்றொன்று மாவட்ட பதிவாளர் தணிக்கை.
பதிவுத்துறையில் மறுசீரமைப்புப் பணியின் தொடர்ச்சியாக சமீபத்தில் புதிதாக ஐந்து பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் அனைத்து பதிவு மாவட்டங்களிலும் இந்த மாவட்ட பதிவாளர் நிர்வாகம் மற்றும் தணிக்கை பணியிடங்களை நிரப்ப வேண்டி இருந்தது. ஒரு பக்கம் இவ்விரண்டு பணியிடங்களும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த நிலையில் மாவட்ட பதிவாளர் நிலையில் சென்னையில் 20 இடங்களில் மாவட்ட பதிவாளர்களே சார்பதிவாளர்களாக பதிவு பணியை மேற்கொண்டு வந்தனர்.
எனவே தேவையைக் கருதி இந்த மாவட்ட பதிவாளர்களை பதிவு மாவட்டங்களுக்கு நிர்வாகம் மற்றும் தணிக்கை பணிக்காக அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. புதிதாக மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் உருவாக்கப்படாத நிலையில் நிர்வாக நலனிற்காக இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் மாவட்ட பதிவாளர் நிலையில் பதிவு பணியை மேற்கொண்டிருந்த சார்பதிவாளர்களை மாற்றி அந்த இடத்தில் சார்பதிவாளர் நிலையில் உள்ள பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து நிரப்பும் பொழுது அந்த பணியிடம் சார்பதிவாளர் நிலைக்கு தரம் இறக்கப்படும். இவ்வாறு 20 இடங்களில் சார்பதிவாளர்களை அவ்விடங்களுக்கு பணியிட மாற்றம் செய்திருந்தால் அந்த 20 மாவட்ட பதிவாளர் பணியிடங்களும் தரம் இறக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கும். இதனால் பணி மூப்பு பட்டியலில் இளையவர்களாக இருக்கும் 20 மாவட்ட பதிவாளர்கள் பணியிறக்கம் செய்யப்படும் நிலையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.
எனவே இதனைத் தவிர்க்கும் நோக்கில்தான் இந்த 20 இடங்களிலும் பணியமர்த்தப்பட்ட சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் (Transfer) செய்யப்படாது பகராண்மையில் (Deputation) மாற்றம் செய்யப்பட்டார்கள். இதன் காரணமாக இருபது மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் பதவி இறக்கம் செய்யப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் கூடுதலாக பெறப்பட்டு இதற்கு தீர்வு காணப்படலாம்.
மேலும் சாலவாக்கம் மற்றும் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் நிரந்தர பணியிடம் இன்னமும் தோற்றுவிக்கப்படாததால் இவ்விரு இடங்களும் பகராண்மையில் நிரப்பப்பட்டுள்ளன. திருவண்ணாமலை எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளவர் ஏற்கெனவே பகராண்மையில் பகராண்மையிலேயே தற்போதும் பணியமர்த்தப்பட்டுள்ளார். பணியில் இருந்ததால்
நிலைமை இவ்வாறிருக்க ஏதோ ஓர் உள்நோக்கத்தோடு இந்த இருபத்து மூன்று சார்பதிவாளர் பணியிடங்களும் பகராண்மையில் நிரப்பப்பட்டுள்ளது என்பது முற்றிலும் தவறான தகவலாகும், என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
கட்டணம் உயர்வு: சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டு உள்ளன. எந்தெந்த சேவை கட்டணங்கள் மாற்றப்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம்.
பத்திர பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. பல்வேறு துறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டாலும் பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மட்டும் மாற்றப்படாமலே இருந்தது.
எனவே, பத்திர பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இந்த 20 இனங்களுக்கும் சேவைகளின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன்படி ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/ லிருந்து ரூ.1,000/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது நாளை முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அ
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications