ரேஷன் கடைகளுக்கு பறக்கும் மிக முக்கிய உத்தரவு.. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு முக்கியமான புதிய உத்தரவு ஒன்று விரைவில் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி நேற்று பழனியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது.

ரேஷன்

ரேஷன்

அதன்படி ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைகளில் குப்பை இருக்க கூடாது. அதேபோல் பொருட்கள் வைத்து இருக்கும் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும். தரையில் அரிசி, சர்க்கரை இறைந்து இருக்க கூடாது. அதை திரட்டி மக்களுக்கு கொடுக்க கூடாது. சுத்தத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ரேஷன் கடைகள் தமிழ்நாடு

ரேஷன் கடைகள் தமிழ்நாடு

இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு ஒன்று விரைவில் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பழனி அருகே பேசிய அவர்... அரிசி ஆனாலும் சரி.. பருப்பு ஆனாலும் சரி.. சர்க்கரை ஆனாலும் சரி.. அனைத்தையும் இனி பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

அரிசி ஆளை

அரிசி ஆளை

அதேபோல் தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள் விரைவில் அதிகம் தொடங்கப்படும். 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் எளிதாக தாங்கள் விளைவித்த அரிசியை கொண்டு சேர்க்க முடியும். அதேபோல் ரேஷன் கடைகள் சீரமைக்கப்படும், என்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

முன்னதாக ரேஷன் கடைகளில் அரிசி வாங்க சரியான பைகள் இன்றி மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இதற்காக மஞ்சள் பை கொண்டு வர அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் மக்கள் மஞ்சள் பை இன்றி பிளாஸ்டிக் பேக்குகளை கொண்டு வந்தனர். இந்த நிலையில்தான் அனைத்தையும் இனி பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதை மட்க கூடிய துணிகளில் பேக் செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+