மறுபடியும் முதல்ல இருந்தா.. வண்டலூரிலேயே.. இந்த முறை திருவண்ணாமலை கிளம்பிய சென்னை மக்கள்
சென்னை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் சாரை சாரையாக செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் வண்டலூர் - பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.மாலை நேரத்திலும், ஆம்னி பேருந்துகள் கடந்து செல்லும் இரவு நேரங்களிலும் இன்றும் நாளையும் கடுமையான நெரிசல் இருக்கும்.. திருவண்ணாமலை செல்வோர் கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.
கடந்த வாரம் ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மக்கள், மீண்டும் கடந்த வாரம் சனி, ஞாயிறுகளில் சென்னை திரும்பினார்கள். அப்போத ஜி.எஸ்.டி சாலையில் ஏற்பட்ட நெரிசல் ஒரு பூகம்பத்தைப் போல இருந்தது. குறிப்பாகச் சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதிகளில் மக்கள் மூச்சுவிடக்கூட முடியாமல் வாகனங்களுக்குள் முடங்கிக் கிடந்தன. போக்குவரத்து போலீசார் இரவு பகலாகப் போராடி நிலைமையைக் கட்டுப்படுத்தினார்கள்.

இந்நிலையில், தற்போது சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மீண்டும் சென்னை மக்கள் மொத்தமாகத் திருவண்ணாமலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இன்றும், நாளையும் இந்தப் பயணம் உச்சமடையும் என்பதால் ஜி.எஸ்.டி சாலையில் கடும் நெரிசல் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெரிசலுக்கு மிக முக்கியக் காரணம், மொத்தமாக எல்லாருமே தாம்பரம் செங்கல்பட்டு சாலை பிடித்து செல்வது தான். அதேபோல் செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை நெரிசலுக்கு காரணமாக உள்ளது. எனெனில். ஆங்காங்கே சாலைகள் மறிக்கப்பட்டு, பாலப் பணிகள் நடப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெரிசலில் சிக்கித் தவித்த அதே செங்கல்பட்டு - திண்டிவனம் வழித்தடம், இப்போதும் பக்தர்களுக்குப் பெரும் சவாலாக மாறப்போகிறது.
தற்போதைய நிலையில் வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாலை அல்லது இரவில் கிளம்பினால் செங்கல்பட்டைத் தாண்டியும் கண்டிப்பாக நெரிசல் நீடிக்கும். மேம்பாலப் பணிகள் நடக்கும் இடங்களில் வாகனங்கள் ஒரு வழிப் பாதையில் இயக்கப்படுகிது. எனவே ஒவ்வொரு இடமும் செக் மேட் இடமாக நெரிசலாகவே இருக்கும். இரவில் கிளம்பும் போது ஆம்னி பேருந்துகளும் ஒன்று சேரும் என்பதால், அப்போது நெரிசல் உச்சமாகவே வாய்ப்பு உள்ளது. பக்திப் பரவசத்துடன் திருவண்ணாமலைக்குக் கிளம்பும் பக்தர்கள், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையில் மிக கவனமாக செல்ல வேண்டும்.. முடிந்தவரை ஆம்னி பேருந்துகள் செங்கல்பட்டை அடையும் நேரத்திற்கு முன்பே கிளம்பினால் எளிதாக செல்லலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications