மகளிர் உரிமைத் தொகை லிஸ்ட் ரெடி.. 24 மணி நேரத்தில் வரப்போகும் சர்ப்ரைஸ்! நடக்க போகும் தரமான சம்பவம்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு இன்று முதல் அதற்கான பதில் மெசேஜ் வழியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமான விரிவாக்க அறிவிப்பு செப்டம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 24 மணி நேரத்திற்குள் விண்ணப்பித்தவர்களுக்கான முதல் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன.

உங்களுடன் ஸ்டாலின்
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைகின்றன. எனவே, முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 28 முதல் பதில்களைப் பெறத் தொடங்குவார்கள். அதாவது, இன்னும் 24 மணி நேரத்தில் அவர்களுக்கு பதில் கிடைத்துவிடும்.
"உங்களுடன் ஸ்டாலின்" முகாம் வழியாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் தற்போது பகுதியளவில் பரிசீலனையில் உள்ளன. அவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்குமா என்பது குறித்த தகவல்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் வெளியிடப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.
உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமைத் தொகை திட்டம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் சுமார் 25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், மகளிர் உரிமைத் திட்ட நிதி உதவி கோரி 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மனுக்கள் மீதான செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விரிவாக்கம்
சமீபத்தில் வெளியிடப்பட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள், நேரடியாக அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இந்த உரிமைத் தொகை பெறத் தகுதியற்றவர்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறதி நோய், பார்கின்சன் நோய், தசைச்சிதைவு நோய், மற்றும் தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியம் பெறாத தகுதியுள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் புதிய பயனாளிகள்
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மேலும், 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19,487 இலங்கைத் தமிழர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாக சில சலுகைகள் வழங்குவது குறித்து 19.06.2025 அன்று தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மேலும் பல பெண்கள் பயனடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications