35 ஆண்டுகளாக ஊரை கையில் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தினர்... வாக்காளர்கள் மனம் மாறாதது எப்படி..?
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை, கடந்த 35 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் மட்டுமே நிர்வகித்து வருகின்றனர்.
புதிது புதிதாக எத்தனையோ வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட்டும், அவர்கள் அனைவரையும் ஓரங்கட்டி மனம் மாறாமல் வாக்காளர்கள் அந்த குடும்பத்தினரை மட்டுமே தேர்வு செய்கின்றனர்.
இந்தளவுக்கு ஒரு ஊரே ஆதரவு தருகிறது என்றால், அந்த குடும்பத்தினர் அப்படி என்ன அந்த மக்களுக்கு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவல் எழுகிறது அல்லவா.

செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் ஊராட்சியில் எத்திராஜ் என்பவர் கடந்த 1965-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். இவரது காலத்துக்கு பிறகு கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் எத்திராஜின் மூத்த மகன் ராஜசேகர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். இதையடுத்து தலைவர் பதவி பெண்கள் கோட்டாவுக்கு மாறியதை தொடர்ந்து தன் வீட்டு பெண்களையே தேர்தலில் போட்டியிட வைத்தார் ராஜசேகர்.

ஊர் தலைவர்
அதன்படி 1996-ம் ஆண்டு தனது மனைவி சரஸ்வதியை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நிறுத்தி அவரை வெற்றி பெறவும் வைத்தார் ராஜசேகர். 2007-ம் ஆண்டு வரை தலைவராக இருந்த சரஸ்வதி காலமானதை அடுத்து, அங்கு நடந்த இடைத்தேர்தலில் எத்திராஜின் இளைய மருமகள், அதாவது ராஜசேகரின் தம்பி ரங்கராஜனின் மனைவி சுஹாசினி தலைவரானார். அவர் கடந்த 2016-ம் ஆண்டு வரை தலைவராக இருந்திருக்கிறார்.

35 ஆண்டுகள்
இதையடுத்து தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் சுஹாசினி ரங்கராஜனே பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்படி 35 ஆண்டுகளாக ஊருக்குள் கொடிகட்டி பறக்கும் எத்திராஜின் குடும்பத்தினரை எதிர்த்து பலர் போட்டியிட்டும் அவர்களில் ஒருவரால் கூட வெல்ல முடியவில்லை.

சொந்த நிதி
அரசு நிதியை மட்டுமே நம்பியில்லாமல் சொந்த நிதியில் ஊருக்கான பணிகளை முன்னெடுப்பது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதில் அணுக முடிய என்பது எத்திராஜ் குடும்பத்தின் பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதனிடையே ஓராண்டு, ஈராண்டு இல்லை, 35 ஆண்டுகளாக ஊர் மக்களின் நன்மதிப்பை ஒரே மாதிரி நிலை நிறுத்தி வைத்திருப்பது பொதுவாழ்க்கையை பொறுத்தவரை பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications