சென்னை சிஆர்பிஎப் பயிற்சி மையத்தில் பரபரப்பு! குறி தவறிய குண்டு.. வீட்டு மேற்கூரையை துளைத்தது!
சென்னை: சென்னை ஆவடி பயிற்சி மையத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் இன்று துப்பாக்கிச்சூடும் பயிற்சி மேற்கொண்டபோது குறி தவறிய குண்டு அருகே உள்ள வீட்டின் மேற்கூரையில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆவடியில் சிஆர்பிஎப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு சிஆர்பிஎப் படைப்பிரிவில் உள்ள வீரர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீரர்களுக்கு துப்பாக்கிச்சூடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான வீரர்கள் பயிற்சி பெற்று பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் வழக்கம்போல் சென்னை ஆவடி மையத்தில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு பயிற்சி துவங்கியது. வீரர்களில் ஒரு பகுதியினர் துப்பாக்கிச்சூடும் பயிற்சியில் ஈடுபட்டனர். இலக்குகளை நோக்கி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது வீரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு எதிர்பாராதவிதமாக இலக்கை விட்டு விலகியது.
இதனால் இந்த குண்டு பயிற்சி மையத்தை தாண்டி அருகே உள்ள வீட்டின் மேற்கூரையை துளைத்து வீட்டுக்குள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications