நடுரோட்டில் அலறிய பெண்.. வடபழனி 100 அடி ரோட்டில் திடீரென எரிந்த கார்.. தெறித்து ஓடிய மக்கள்
சென்னையின் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
சென்னை: பெண் ஒருவர் ஓட்டி வந்த கார் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் 100 அடி சாலை எப்போதுமே பரபரப்புடன் காணப்படும் பகுதியாகும்.. கோயம்பேடு மேம்பாலம் வந்ததில் இருந்தே, வாகன போக்குவரத்தும் இங்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு எதிர்பாராத விபத்து இந்த சாலையில் ஏற்பட்டுள்ளது.. சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சில்வியா.. 60 வயதாகிறது.. இவரது மகள் துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார்..

கார்
அவரை பார்ப்பதற்காக முகப்பேரில் இருந்து காரை ஓட்டி வந்துள்ளார். மதியம் 12.30 மணியளவில் வடபழனி 100 அடி சாலையில் வந்து கொண்டிருந்தார்.. சூளைமேடு சந்திப்பு அருகே உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் எதிர்புறம் வந்தபோது, திடீரென காரின் முன் பக்கத்திலிருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்..

அலறல்
அதனால் உடனடியாக காரை ஒரு ஓரமாக நிறுத்திய சில்வியா, அலறி அடித்து கொண்டு காரில் இருந்து கீழே இறங்கி வந்தார்.. அடுத்த சில நொடிகளிலேயே அந்த கார் மளமளவென முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது... அதற்குள் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தகவல் கிடைத்ததுமே கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்...

பாதிப்பு
ஆனால், இதில் யாருக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை... விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. என்றாலும், இந்த சம்பவம் பெரும் பீதியை கிளப்பிவிட்டது.. காரணம், கடந்த ஜூன் மாதம், இதே கோயம்பேடு மேம்பாலத்தில் தான் ஒரு கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது..

பரபரப்பு
அப்போது அதில் பயணம் செய்த அர்ஜூனன் என்பவர் காருக்குள்ளேயே தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.. காரை ஓட்டிவந்த சுனில் என்ற டிரைவர் தீக்காயத்தால் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , பிறகு பலனின்றி உயிரிழந்தும் விட்டார்.. ஒரே இடத்தில், ஒரே மாதிரியாக கார் தீப்பற்றி எரியவும், இந்த சம்பவம் கலக்கத்தையும் பரபரப்பையும் தந்துவிட்டது...!
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications