கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது.. போக்குவரத்து போலீஸாருக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போக்குவரத்து போலீஸார் சாலையில் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழகத்தில் அதிக அளவிலான சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

Chennai Traffic police Vehicle check

தலைக்கவசம் அணியாதது, வாகனங்களை வேகமாக ஓட்டுவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, பைக்கில் வித்தை காட்டுவது, சிக்னல் ஜம்பிங் செய்வது, செல்போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவது, சில வாகன ஓட்டிகள் ஒருபடி மேலே சென்று நாடகங்கள், கிரிக்கெட்டுகள் பார்த்துக் கொண்டு வாகனங்களை இயக்குவது என தினந்தோறும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை நாம் காண முடிகிறது.

குறிப்பாக சென்னையில் வாகன ஓட்டிகள் பலரும் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு வழிச் சாலையில் கூட வாகனங்களை எதிர்ப்புறமாக வேகமாக ஓட்டுகின்றனர். போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து பொதுமக்கள் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில், சென்னையில் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர். வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாகவும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இ செலானும் கொடுக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் இ-செலானை வாங்கி விட்டு அபராதம் கட்டாமல் கிடப்பில் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் ஈடுபடும்போது போலீஸிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வாகன ஓட்டிகள் வேகமாக வாகனங்களை இயக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீஸார் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் சோதனை நடத்தும் போக்குவரத்து போலீஸார் கும்பலாக நின்று சோதனை மேற்கொள்வது குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலைகளில் போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடும்போது கும்பலாக நிற்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு போலீஸ்காரர் மட்டுமே வாகன சோதனையின்போது இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காவலர் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்றும், உதவி காவல் ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+