அடுத்த வாரம் தொடங்கும் சட்டசபை தேர்தல்... 19 நாட்களாக உயராத பெட்ரோல் டீசல் விலை
சென்னை: ஐந்து மாநில தேர்தல்கள் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் கடந்த 19 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டியது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 93.11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 91.17 ரூபாய்க்கும் டீசல் 81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல மும்பையில் பெட்ரோல் 97.57 ரூபாய்க்கும், டீசல் 88.60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அடுத்த வாரம் வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 91.35 ரூபாய் மற்றும் 84.35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த மாதம் பெரும்பாலான நாட்கள் தொடர்ந்து உயர்ந்த வந்த பெட்ரோல், டீசல் விலை ஐந்து மாநில தேர்தல் குறித்த அறிவிப்பிற்குப் பின் உயர்த்தப்படவில்லை. அடுத்த மாதம் மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் இன்று கச்சா எண்ணெய் ஒரு பேரல் 64 டாலருக்கு வர்த்தகம் ஆகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டும் விதமாக ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
-
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications