Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போக்சோ வழக்கு.. பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம்.. விஜய் ஆனந்த் ஜாமீன் மனு ஹைகோர்ட் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்சோ வழக்குகளில் தாய், தந்தை மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திரை மறைவில் ஒழிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என குறிப்பிட்டுள்ள நீதிபதி விஜய் ஆனந்த்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் டிஜிபியான திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக் மற்றும் அவரது மனைவி ஷ்ருதி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது 2 குழந்தைகளும் தந்தை வசம் உள்ளனர். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

In POCSO case, welfare of victim girl is more important than welfare of parents, relatives says High Court

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, தாய் ஷ்ருதி வீட்டில் இருந்து தனது ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரச் சென்ற தனது மகளை, ஷ்ருதி திட்டியதாகவும், ஷ்ருதியின் சகோதரர் விஜய் ஆனந்த், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், பிரபு திலக், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் ஷ்ருதிக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அவரது சகோதரர் விஜய் ஆனந்துக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, தமக்கு முன்ஜாமீன் கோரி மீண்டும் விஜய் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

In POCSO case, welfare of victim girl is more important than welfare of parents, relatives says High Court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக மனுதாரர் தரப்பில் கூறினாலும் இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸ் விசாரணை தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

திரை மறைவில் ஒழிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என குறிப்பிட்டுள்ள நீதிபதி விஜய் ஆனந்த்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இது போன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் எனவும் முடிவில் அந்த சிறுமியின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டியதே முக்கியம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட விஜய் ஆனந்த் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+