தேர்தல் முடிவுக்கு பின்.. பூத் ஏஜெண்ட்க்கு கிப்ட் கொடுக்கும் திமுக.. ஆக்ஷன் எடுக்க தயாராகும் அதிமுக
சென்னை: திமுக மற்றும் அதிமுகவில் பூத் வாரியாக சிறப்பாக செயல்பட்டவர்களின் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திமுகவில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கிப்ட் அளிக்கப்பட உள்ளதாகவும், அதிமுகவில் மோசமாக செயல்பட்டவர்களின் பதவியை பறிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து பெரும்பாலான அரசியல் கட்சி நிர்வாகிகள் விடுமுறையை கொண்டாட சுற்றுலா சென்றுள்ளனர். இருந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் முடிவுகளின் மீதே கண் வைத்துள்ளனர். இந்த முறை விஜய் களம் புகுந்திருப்பதால், எந்தக் கட்சியின் வாக்குகள் பிரியப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பூத் வாரியாக கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை கொண்டு எந்த பூத்தில் எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதை ரிப்போர்ட்டாக அளிக்க திமுக தலைமை அறிவுத்தி இருக்கிறது. இதனை கைப்பற்றி ஆராயும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த ரிப்போர்ட் உடன் தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஒப்பிட்டு பார்க்கப்பட இருக்கிறது. அப்போது சரியான ரிப்போர்ட் அளித்துள்ளதோடு, சிறப்பாக செயல்பட்ட பூத் ஏஜெண்ட்டுகளை அழைத்து திமுக தலைமை சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சிப் பதவிகளும் அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
மறுபக்கம் அதிமுகவிலும் தொகுதி வாரியாக ரிப்போர்ட் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் மோசமாக செயல்பட்ட நிர்வாகிகள் மீது ஆக்ஷன் எடுக்கவும் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருகிறார். அதுமட்டுமல்லாமல், மாவட்ட வாரியாக வரும் ரிப்போர்ட் அடிப்படையில் மிகப்பெரிய மாற்றங்களும் நிகழலாம் என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவுக்கு இது வாழ்வா சாவா தேர்தல் என்பதால், எடப்பாடி பழனிசாமி நிச்சயம் கடுமையான நடவடிக்கையை எடுப்பார் என்றும் அக்கட்சியினர் முணுமுணுத்து வருகின்றனர். மைக்ரோ லெவனில் இரு கட்சிகளின் தலைமையும் ரிப்போர்ட் எடுப்பதால், யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்று இரு கட்சியினர் இப்போதே அச்சத்தில் இருக்கின்றனர்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications