திருப்பூரில் சுற்றும் கும்பல் பெண்கள்.. கடைக்கார்களுக்கு நொடியில் அல்வா.. அசந்தால் மொத்தமாக காலி
திருப்பூர்: திருப்பூர் - அனுப்பர்பாளையத்தில் நூற்றுக்கணக்கான பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஒரு தொழிற்சாலைக்குள் கும்பலாக வரும் சில பெண்கள் அங்குள்ளவர்களுடன் தண்ணீர் கேட்பது போல அடாவடியாக நுழைந்து அங்கிருக்கும் பொருட்களை திருடி சென்று விடுகின்றனர். இதுபற்றிய சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பாத்திர பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் - அனுப்பர்பாளையத்தில் நூற்றுக்கணக்கான பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீப நாட்களாக பாத்திரப் பட்டறைக்குள் மற்றும் அதுதொடர்பான தொழிற்சாலைக்குள் கும்பலாக சில பெண்கள் உலா வருகிறாரகள். அங்குள்ளவர்களிடம் தண்ணீர் கேட்பது போல அடாவடியாக நுழைந்து அங்கிருக்கும் பொருட்களை திருடி சென்று விடுகின்றனர். இதே போல சில பாத்திரப் பட்டறைகளில் ஆளில்லாத நேரமாக அங்கு சென்று பொருட்களை திருடி சென்று விடுகிறார்கள்.

இந்த அடாவடி திருட்டு சம்பவங்கள் காரணமாக பாத்திர பட்டறை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இப்பெண்களால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்டிகளுடன் 15 வேலம்பாளையம் போலீசில் புகாரளித்துள்ள பாத்திரப்பட்டறை உரிமையாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வயர் திருட்டு
இதனிடையே விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முத்து (வயது 45) என்பவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் அப்பச்சி நகர் 3வது குறுக்கு வீதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையை அண்மையில் இவர் திறந்து வைத்து டீகுடிக்க வெளியே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது 45 கிலோ தாமிர வயறு திருடு போயிருந்தது. இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த முத்தம்மாள் (38), அனிதா (35), மங்கம்மாள் (43), தேவி (38), பொன்னுத்தாய் (50), கருத்தம்மாள் (26), சித்ரா(27), லட்சுமி (32), வள்ளி (22)ஆகிய 9 பேரை கைது செய்தனர். கும்பலாக வந்து திருடப்பட்ட வயரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications