எங்கப்பா இங்கே இருந்த கடற்கரையை காணோம்? தமிழகத்தில் உருப்படியாக இருப்பது 37%.. மிச்சமெல்லாம் மோசம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 991 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் 37 சதவீதம் மட்டுமே சேதமின்றி அப்படியே உள்ளது. எஞ்சியதில் 40 சதவீத கடற்கரையில் மண்அரிப்பாலும், 23 சதவீதம் மண்திட்டாலும் சேதப்பட்டுள்ளது. இதனால் தமிழக கடற்கரையை பாதுகாக்க தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் புதிய திட்டம் அவசியமாக உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 13கடலோர மாவட்டங்கள் உள்ளன. காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளாக உள்ளன. மொத்தமாக தமிழகத்தில் 991 கிலோமீட்டர் நீளம் கடற்கரை அமைந்துள்ளது.
இயற்கை நிகழ்வு மற்றும் மனித தலையீடுகள் என 2 வழிகளில் கடற்கரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள 63 சதவீத கடற்கரை பாதிக்கப்பட்டுள்ளது அறிக்கை ஒன்றின் வழியாக தெரியவந்துள்ளது.

அறிக்கையில் இருப்பது என்ன
புவியியல் அமைச்சகம் மற்றும் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தின் தேசிய மதிப்பீட்டின்படி 1990 முதல் 2016 வரையிலான அறிக்கையின்படி தமிழ்நாடு கடற்கரையில் சுமார் 40 சதவீத கரையில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. 23 சதவீத கரைகள் மேடாக அல்லது திரட்டியாக மாறியுள்ளது. மேலும் கடற்கரையின் 37 சதவீத பகுதிகள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. கடற்கரையில் ஏற்பட்ட இத்தகைய மாற்றத்துக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் தான் காரணம் என கூறப்படுகிறது.

கடல் அரிப்பால் பாதிப்பு
அதன்படி காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகள் அரிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் உள்ள கடற்கரை பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மணல் மேடுகளாக உருவாகி உள்ளன. அதாவது மொத்தமுள்ள 991.47 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தமிழக கடற்கரையில் 14.66 கிலோமீட்டர் அளவுக்கு அதிகளவில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. 36.65 கிலோமீட்டருக்கு மிதமான மண்அரிப்பும், 355.74 கிலோமீட்டர் அளவுக்கு குறைந்த மண்அரிப்பும் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் 194.27 கிலோமீட்டர் தொலைவுக்கு குறைந்த திரட்சி (கரை உயர்வு அல்லது மண்மேடு), 23.96 கிலோமீட்டருக்கு மிதமாகவும், 12.63 கிலோமீட்டருக்கு அதிகமாவும் திரட்சி ஏற்பட்டுள்ளது. 353.74 கிலோமீட்டர் நீளத்துக்கான கடற்கரையில் எந்த பாதிப்பும் இல்லை.

தென்மாவட்டங்களின் நிலை என்ன
தென்மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி கடல்கள் மட்டும் 514.2 கிமீ நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. இது தமிழகத்தின் 52 சதவீத கடலோர பகுதியை கொண்டுள்ள நிலையில் இங்கு தான் கடந்த 30 ஆண்டுகளாக அதிகளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ராமநாதபுரம் கடற்கரை 272.01 கிலோமீட்டர் தொலைவு உள்ள நிலையில் 104.3 கிமீ மண்அரிப்புக்கு உள்ளாகி உள்ளது. 41.77 கிலோமீட்டருக்கு திரட்சி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்கரை பகுதி 121.43 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிந்துள்ள நிலையி்ல 21.8 கிலோமீட்டர் நீளத்துக்கு மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. 52. 64 கிலோமீட்டர் தொலைவு திரட்டி அடைந்துள்ளது. 51.70 கிலோமீட்டர் தொலைவிலான திருநெல்வேலி கடற்கரை பகுதியில் 9.40 கிலோமீட்டர் தொலைவுக்கு மண்அரிப்பும், 20.7 கிலோமீட்டருக்கு மண்மேடும் உருவாகி உள்ளது. 69.06 கிலோமீட்டர் நீளமுள்ள கன்னியாகுமரி கடற்கரையில் 44.56 கிமீ தூரம் மண்அரிப்பாலும், 6.64 கிமீட்டர் தூரம் மண்மேடாகவும் உள்ளது.

அறிவியல் அணுகுமுறை அவசியம்
இதுபற்றி தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்வி ரமண மூர்த்தி, கூறுகையில், ‛‛மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் தாக்கம் கடற்கரையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஆறுகளில் இருந்து வரும் வண்டல் அளவு குறைந்துள்ளது. இதுவும் கடற்கரையின் கரை அரிப்புக்கு மற்றொரு முக்கி காரணமாகும். கடல் மட்ட உயர்வு, வேகமான சூறாவளி, அதிக உயரத்துக்கு அலை எழும்புதல் ஆகியவை காலநிலை மாறுபாட்டால் ஏற்படுகிறது. இதனால் கடல் அரிப்பை தடுப்பதற்கான கட்டமைப்புகளின் வடிவமைப்பை மறுமதிப்பீடு செய்வது அவசியமாகும். இதற்கு அறிவியல் அணுகுமுறை தேவை'' என்றார்.

விரைவான செயல்பாடு அவசியம்
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் கூறுகையில், ‛‛காலநிலை மாற்றத்தால் கடற்கரை மட்டுமின்றி க்ரோய்ன்கள்(groynes), கடல் சுவர்கள், சிறு துறைமுகங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவையும் மாற்றமடைந்துள்ளன. ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, கடற்கரையோரத்தில் க்ரோயின்கள் கட்டும் பணியை நிறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது. இது வரவேற்கத்தக்கது. மாநில அரசு உடனடியாக கரையோர மேலாண்மை திட்டத்தை வகுத்து, கடற்கரையில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முறையாக செயல்படுத்த வேண்டும்'' என்றார்.

நீர்த்திட்டங்களால் பாதிப்பு
இதுபற்றி புவி கண்காணிப்புக்கான சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு நிபுணர் ராஜ் பகத் பழனிச்சாமி கூறுகையில், ‛‛ஆற்றின் பாதைகளில் முறையின்றி தடுப்பணைகள், அணைக்கட்டுகள் மற்றும் பிற நீர் தடை கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. இது கரையோரங்களுக்கு வண்டல் விநியோகத்தை தடை செய்கிறது. தமிழகத்தில் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் உள்ளன. ஆனால் ஆறுகளுக்குமத்தியில் நீர் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் கடலுக்கு வண்டல் வரத்து இல்லை. வண்டல் வரத்து குறைவு என்பது அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாதுகாப்பு திட்டம் அவசியமாகும்'' என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications