வரி ஏய்ப்பு புகார்.. தமிழ்நாடு, ஆந்திரா உள்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை: சென்னை அண்ணாநகர் உள்பட தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டும் இன்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பல நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள 4 குழுமங்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு கணக்கில் வராத வருவாய் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த குழுமங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா நகரில்..
குறிப்பாக சென்னை அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடன்சி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணா நகர் 6-அவென்யூவில் உள்ள உள்ள ஹோட்டல் உரிமையாளர் வீட்டிற்கு 3 வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்தூறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அசோக் ரெசிடன்ஸி நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னையில் 3 இடங்களில் ஓட்டல் உள்ளது. இந்த 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது

60-க்கும் மேற்பட்ட இடங்களில்
அதேபோல், ஆதித்யராம், அம்பாலால் குழுமங்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மட்டும் இன்றி காஞ்சிபுரம், விழுப்புரம், மணலி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்கள் என தமிழகம் முழுவதும் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு , கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சேர்த்து வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய 4 நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கணக்கில் வராத பணம்
இன்று காலை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களிலும் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வருமான வரி சோதனைக்கு பிறகே கணக்கில் வராத பணம் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதா என்பன போன்ற தகவல்கள் வெளியாகும். வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து வருவது வருவது வழக்கம்.

புகார்கள் வந்து இருப்பதால்
அந்த வகையில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற புகார்கள் வந்து இருப்பதால் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இன்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications