காலையிலேயே கிளம்பிய ஐடி அதிகாரிகள்.. சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை: சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தரமணியில் உள்ள ஐடி நிறுவனங்கள் உள்பட சென்னை முழுவதும் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலையில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. ஜி ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பறக்கும் படையினரும் ஆங்காங்கே சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை மறித்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கமாக ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்லப்படக் கூடாது என்பதால் பல்வேறு இடங்களிலும் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஜி ஸ்கொயர் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஜி ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
தரமணியில் உள்ள ஐடி நிறுவனங்கள் உள்பட சென்னை முழுவதும் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எழும்பூர், நந்தனம், அடையார், ஆழ்வார்ப்பேட்டை, அண்னாநகர் என கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இதே நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில் அதே நிறுவனத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications