யாருக்கு டார்கெட்? 3வது நாளாக அன்புச்செழியன் வீட்டில் குவிந்த வருமான வரித்துறை டீம்.. தொடரும் ரெய்டு
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து.வருகிறார்கள். தமிழ்நாட்டில் முக்கிய சினிமா தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் வீடுகளில் இன்று அடுத்தடுத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் முதலில் ரெய்டு தொடங்கியது. அவருக்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று முதல் நாள் ரெய்டு நடந்தது.
இதில் பெரிய அளவில் ஆவணங்கள் கிடைக்காத நிலையில் நேற்றும் தொடர்ந்து ரெய்டு நடத்தப்பட்டது.

ரெய்டு
அன்புச்செழியன் வீடு, அவரின் நண்பர்கள் வீடு, அவரின் பல்வேறு அலுவலகங்களில் சென்னை மற்றும் மதுரையில் ரெய்டு நடத்தப்பட்டது. நேற்று இந்த ரெய்டில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று மூன்றாவது நாளாக ரெய்டு நடத்தப்படுகிறது. தி.நகரில் உள்ள அவரது இல்லம் மற்றும் பல்வேறு அலுவலகங்களில் சோதனை தொடர்கிறது.

2020 ரெய்டு
கடந்த முறை 2020ம் ஆண்டில் அன்புசெழியன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அவரின் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு கணக்கில் வராத பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் சினிமாவில் பல தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுத்துள்ளார். வட்டிக்கு கடன் கொடுத்ததாக இவர் மீது சில புகார்களும் கூட உள்ளன.

பின்னணி
அவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையிலேயே 3வது நாள் ரெய்டு நடக்கிறது. அன்புசெழியனுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு பின்புலங்கள் இருக்கின்றன. சமீபத்தில் இவரின் இல்ல திருமண விழாவில் சமீபத்தில் கூட மொத்த திரையுலக பிரபலங்களும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Recommended Video

காரணம் என்ன?
இந்த நிலையில்தான் அவரின் வீட்டில் ரெய்டு நடப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இவருக்கு அரசியல் ரீதியாக பல்வேறு தொடர்புகள், நட்புகள் உள்ளன. இதனால் இவர் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கு பின்பு வேறு யாரும் குறி வைக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புசெழியன் வீட்டு ரெய்டை தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணு வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு இரண்டு நாட்களாக நடந்தது. Studio Green தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவின் உறவினருமான எஸ். ஆர் பிரபுவின் வீட்டிலும் இரண்டு நாட்களாக ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications