50 இடங்கள்.. 4 நாள் பரபர.. ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு! என்னாச்சு?
சென்னை: ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனம் ஜி ஸ்கொயர். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இழப்பில் இயங்கி வருவதாக கணக்கு காட்டப்பட்டு உள்ள நிலையில், புதிய முதலீடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் பணம் கிடைத்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

அதிக அளவிலான நிலங்களை ஒரே நேரத்தில் கையகப்படுத்தியதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உள்ளது.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழ்நாட்டில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் அதிகமான இடங்களில் காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள தொடங்கினர். கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வருமான வரிசோதனை நடைபெற்றது.
சென்னையை பொறுத்தவரை நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட 30 க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் சென்னை நீலாங்கரையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவன நிர்வாகி வீட்டிலும் கடந்த 4 நாட்களாக சோதனை நடைபெற்றது. அதேபோல் சென்னை அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் என்பவரின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமையகத்தில் கடந்த 4 நாட்களாக 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடைபோட்டு தேட தொடங்கினர். இந்த நிலையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்றுடன் நிறைவடைந்து இருக்கிறது. இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்று இருப்பதாகவும், விரைவில் இந்த சோதனை குறித்து விரிவாக அறிவிக்கை வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications