33 காசுகள் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை.. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் செஞ்சுரி.. இன்றைய நிலவரம்!
சென்னை: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சமயங்களில் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது.

இந்தியாவில் தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் அவதிப்படும் போதும் கூட பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 99.82 ஆக உள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்தது. சென்னையில் டீசல் விலை ரூ. 93.74 ஆக உள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை 95.33 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 89.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 93.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 101.75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 93.99 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 104.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 94.16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை போக மற்ற மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டி உள்ளது. ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல், , நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை பெட்ரோல் விலை 101 -102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications