சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டீம் ஜெயிக்கும்போது.. அவர் எதுக்கு? கோலிக்கு வைக்கப்படும் செக்.. இந்திய அணியில் வரும் ஆர்-பி ரூல்?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அணியில் புதிதாக ஆர்பி ரூல் என்ற முறையை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வருகின்றன. பலரும் ஏற்கனவே எதிர்பார்த்த இந்த விதிமுறை இந்திய அணிக்குள் மீண்டும் வரும் வாய்ப்புகள் உள்ளன.

Recommended Video

    India vs Pakistan T20 தொடரை நடத்த திட்டமிடும் அமீரகம்.. BCCI-யிடம் பேச்சுவார்த்தை

    இந்திய டி 20 அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா பதவி ஏற்று இருக்கிறார். அதேபோல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் பணியாற்ற தொடங்கி உள்ளார்.

    இந்த புதிய ஜோடிக்கு கீழ் இந்திய அணி மிகவும் சிறப்பாக ஆட தொடங்கி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி சிறப்பாக வென்றுள்ளது.

    விவசாய சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா- பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது விவசாய சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா- பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது

    வெற்றி

    வெற்றி

    பவுலிங் பர்ஸ்ட், பேட்டிங் பர்ஸ்ட் என்று இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. அதிலும் மூன்று போட்டியிலும் ரோஹித் சர்மா கேப்டன்சி சிறப்பாக இருந்தது. அஸ்வின் போன்ற மூத்த பவுலர்களை கையாண்ட விதத்திலும் பீல்டிங் செட்டப், பவுலிங் ரொட்டேஷன் செய்த விதத்திலும் ரோஹித் சர்மா மிக சிறப்பாக செயல்பட்டார்.

    கோலி

    கோலி

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கோலி இல்லாமலே இந்திய அணி நியூசிலாந்து டி 20 தொடரை வென்றுள்ளது. கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் இந்திய அணி வென்று இருக்கிறது. பேட்டிங் ஆர்டரில் கோலி இல்லாமல் பெரிய சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. இதனால் டி 20 அணிக்கு கோலி போன்ற மூத்த வீரர் தேவைதானா என்ற கேள்வியும் கூட எழுந்துள்ளது.

    கோரிக்கை

    கோரிக்கை

    ஆனால் டி 20 போட்டிகளில் கோலியின் ரெக்கார்ட் மிக சிறப்பாக இருக்கிறது. மற்ற எந்த பேட்ஸ்மேன்களை விடவும் கோலிக்குதான் அதிக ஸ்டிரைக் ரேட், அதிக ரன்கள் டி 20 போட்டிகளில் இந்திய அணியில் உள்ளது. இதனால் அவரை டி 20 போட்டிகளில் மொத்தமாக ஓரம் கட்ட முடியாது. ஆனால் கோலி இல்லாமல் சிறிய தொடர்களில் இந்திய அணி களமிறங்க முடியும்.

    மூத்த வீரர்கள்

    மூத்த வீரர்கள்

    இது இந்திய வீரர்களுக்கு தேவையான ஓய்வையும் கொடுக்கும். கோலி என்று இல்லாமல் ஷமி, ராகுல், பும்ரா போன்ற வீரர்கள் ஓய்வு எடுக்கவும் இது உதவியாக இருக்கும். இதற்காகத்தான் ஆர்பி முறையை இந்திய அணி கொண்டு வர போவதாக பிசிசிஐ வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன. அதாவது ஆர்பி என்றால் ரொட்டேஷன் பாலிசி.

    ரொட்டேஷன் பாலிசி

    ரொட்டேஷன் பாலிசி

    இங்கிலாந்து அணியில் இந்த ரொட்டேஷன் பாலிசி உள்ளது. அதிகபட்சம் ஒரு வீரர் இரண்டு அணியில் மட்டுமே இருக்க முடியும். டெஸ்ட் - ஒருநாள், டெஸ்ட் -டி 20, ஒருநாள் - டி 20 என்று இரண்டு அணியில் மட்டுமே இங்கிலாந்து வீரர்கள் ஆட முடியும். ஒரே வீரர் மூன்று இங்கிலாந்து அணியிலும் ஆட முடியாது. இது அந்த அணியில் இருக்கும் வீரர்களுக்கு போதிய ஓய்வை கொடுக்கும்.

    ஓய்வு

    ஓய்வு

    இங்கிலாந்து அணி ஐசிசி போட்டிகளில் நன்றாக ஆடுவதற்கு இந்த ஓய்வு முக்கிய காரணம் ஆகும். நியூசிலாந்து அணியிலும் இந்த ரொட்டேஷன் பாலிசி அதிகாரபூர்வமற்ற முறையில் உள்ளது. இந்திய அணியிலும் இந்த ரொட்டேஷன் பாலிசி கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. வீரர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் ஆடி களைப்பாக உள்ளனர்.

    கோலி

    கோலி

    அதிலும் கோலி தொடர்ந்து மூன்று அணியிலும் ஆடியதோடு, ஐபிஎல்லிலும் ஆடி களைப்பாக உள்ளார். இதனால் அவருக்கு டி 20 போட்டிகளில் நீண்ட ரெஸ்ட் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியில் வர உள்ள இந்த ரூல் காரணமாக அதிகபட்சம் ஒரு வீரர் இரண்டு அணியில் மட்டுமே இருக்க முடியும் என்கிறார்கள். டிராவிட் ஏற்கனவே இந்த ரொட்டேஷன் பாலிசி குறித்து சிக்னல் கொடுத்திருந்த காரணத்தால் விரைவில் அது அமலுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Ind vs New Zealand: Team India to have RP rule to give players enough rest across formats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X