சுதந்திர தினம்: ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்து.. புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர் என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. ஆளுநர் ரவி தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே துவக்கம் முதலே சுமுகமான உறவு இல்லை. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. ஆளுநர் ரவியின் பதவிக்காலம் கடந்த 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால், தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால், ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டைகொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவார்.
சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், வரும் 15 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி தேநீர் விருந்தளிக்க உள்ளார். இதற்காக தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கு தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆர்.என். ரவி ஆளுநராக தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ள காங்கிரஸ், தமிழக மக்களின் நலனுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக ஆளுநர் ரவி செயல்படுவதால் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க போவது இல்லை என்று அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மட்டும் இன்றி கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை "தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே அவரது செயல்பாடுகள் இருப்பதால் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இதையடுத்து, சுதந்திர தினம் அன்று நடைபெறுவதாக இருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications