மோடிக்கு ஆரம்பமே சிக்கல்.. அடிமடியிலேயே கை வைக்குதே இந்தியா கூட்டணி.. இதெல்லாம் வேற லெவல் பிளான்
சென்னை: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த திட்டமிடுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 26-இல் மக்களவை சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலும் சந்திரபாபு நாயுடுவின் மச்சினி புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். சபாநாயகர் பதவியை பெறுவதற்கான ரேஸில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலையில் இருக்கிறதாம்.
2024 லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் லோக்சபா ஸ்பீக்கர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா சபாநாயகர் பதவியை தேர்வு செய்வது கடினமானது. சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். அதே சமயம் மைனாரிட்டி அரசு அமையும் போது, கூட்டணி ஆட்சியின் போது ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம் உள்ளது.
முக்கியமாக நம்பிக்கையில்லா தீர்மானம், குதிரை பேரம், எம்பிக்கள் தகுதி நீக்கம் போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சபாநாயகர் பதவி முக்கியமானதாக மாறும்.
தீவிர முயற்சி: இதில், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர மாநில பாஜக தலைவரும், ராஜமுந்திரி எம்.பி.யுமான டக்குபதி புரந்தேஸ்வரி 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். இவரை சபாநாயகராக்க வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறதாம். இதனால் இவரை பற்றிய "ஹிஸ்ட்ரியை" டெல்லி பாஜக ஆய்வு செய்து வருகிறதாம். அதோடு அமித் ஷாவும் இவர் நெருக்கமாக "வாட்ச்" செய்து வருகிறாராம்.
எதிர்க்கட்சிகள் பிளான்: இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த திட்டமிடுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை தங்கள் முகாமுக்கு வழங்காவிட்டால், 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த திட்டமிடுகிறதாம். 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி நிறைவடைகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில், சபாநாயகர் தேர்தலுக்கான பணிகள் ஜூன் 26ம் தேதி நடக்கும்.
துணை சபாநாயகர் பதவி: 17வது மக்களவையில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த நிலையில், துணை சபாநாயகர் அலுவலகம் காலியாக இருந்தது. இந்திய கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுச்சி கண்டுள்ளன.
இந்த நிலையில் சபாநாயகர் தேர்தலில் சில கட்சிகள் கிராஸ் வாக்குகள் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சிவசேனா, ஐக்கிய ஜனதா தளத்திலேயே சிலர் கிராஸ் வாக்குகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இதை மனதில் வைத்தே சபாநாயகர் பதவியை பெற இந்தியா கூட்டணி காய் நகர்த்துகிறதாம். இந்தியா கூட்டணி ஒருவேளை சபாநாயகர் பதவியை பெற்றால் அது பாஜகவிற்கு பெரிய அடியாக இருக்கும்.
நாயுடுவின் திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே "சபாநாயகர்" பதவியை தங்களுக்கான "இன்சூரன்ஸ்" ஆக பார்க்கின்றனர்.
கடந்த 10 வருடங்களில் பாஜக பல அரசுகளை கவிழ்த்து இருக்கிறது. பல மாநில அரசுகளை கவிழ்த்து உள்ளது. பல மாநில கட்சிகளின் லோக்சபா எம்பிக்கள் அணி மாறுவதற்கு பாஜக உதவியாக இருந்துள்ளது. பல கட்சிகளை உடைத்தும் உள்ளது.
இந்த நிலையில் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி மாற்று கட்சிக்கு வாக்களிக்கும் போது அவர்களை தகுதி நீக்கும் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும். இதில் கோர்ட் கூட தலையிட முடியாது. உதாரணமாக எதிர்காலத்தில் பாஜக ஆட்சிக்கான ஆதரவை தெலுங்கு தேசம் வாபஸ் வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.












Click it and Unblock the Notifications