பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்!
சென்னை: மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் இந்தியாவை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியா உட்பட மொத்த உலகமும், கடந்த 1970ல் சந்தித்த எண்ணெய் நெருக்கடியை மீண்டும் சந்திக்கப்போவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் பக்கத்து நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் விரைவில் விலை உயரும் என்றும், மீண்டும் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப ரொம்ப காலம் ஆகலாம் என்றும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

நிபுணர் கொடுத்த வார்னிங்
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில், சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) இயக்குநர் பாத்திஹ் பைரோல் முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது, மத்திய கிழக்கு போர் காரணமாக.. உலகப் பொருளாதாரம் ஒரு பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக கடுமையாக எச்சரித்துள்ளார். தற்போதைய எரிசக்தி நெருக்கடியை 1970களின் எண்ணெய் நெருக்கடிகளுக்கும், ரஷ்யாவின் 2022 உக்ரைன் படையெடுப்பின் தாக்கத்திற்கும் ஒப்பிட்டிருக்கிறார்.
1970க்கு போகும் உலகம்
"இந்த நெருக்கடி, தற்போதைய நிலையில், இரண்டு எண்ணெய் நெருக்கடிகள் மற்றும் ஒரு எரிவாயு சரிவு சேர்ந்தது. உலகப் பொருளாதாரம் இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலிலுள்ளது. இது கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் எந்த நாடும் இதன் தாக்கத்திலிருந்து தப்பாது. எனவே உலகளாவிய முயற்சிகள் தேவை.
இப்போரில், மத்திய கிழக்கு முழுவதும் 40 எரிசக்தி சொத்துகள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன. சர்வதேச எரிசக்தி முகமை, ஆசிய மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களுடன், சேமிப்பு எண்ணெயை மேலும் விடுவிப்பது குறித்து கலந்தாலோசித்து வருகிறது" என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு ஆபத்து
இந்த நெருக்கடியிலிருந்து எந்த நாடும் தப்பிக்காது என்று அவர் கூறியிருப்பது இந்தியாவுக்கும் பொருந்தும். இந்தியாவில் தற்போது 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது. ஏப்.29ம் தேதி இந்த தேர்தல்கள் நிறைவுப்பெறுகின்றன. எனவே அன்றைய தினம் மாலையில் எரிபொருள் விலை உயர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 120 டாலர் என உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் வாங்க நமக்கு டாலர் தேவை. ஏற்கெனவே இருக்கும் டாலர் கையிருப்பு இதனால் வேகமாக குறையும். இது இந்திய ரூபாய் மதிப்பை மேலும் சரிய செய்யும். இப்படியாக விலை உயர்வு + ரூபாய் மதிப்பு சரிவு என இரண்டு பெரிய பிரச்சனையை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது.
நிலைமை எப்போது சரியாகும்?
போர் அடுத்த சில வாரங்களில் நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டால் நிலைமை அடுத்த 3-6 மாதங்களில் சரியாகிவிடும். போர் நீடித்தால், நிலைமை சரியாக 1-2 ஆண்டுகள் வரை ஆகலாம்.
-
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications