Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

24 நாட்களில்.. அடியோடு காலியாகும் இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு! விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் ஒரு மிகப்பெரிய அக்னிப்பரீட்சையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதல்களால் உலகமே பதற்றத்தில் இருக்க, அதன் நேரடிப் பாதிப்பு நம் வீட்டு சமையலறை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

saudi arabia mohammed salman Iran

'ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ்' - உலகத்தின் கழுத்து!

உலக நாடுகளுக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெய்க்கான முக்கிய வழித்தடமான 'ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ்' (Strait of Hormuz) தற்போது முடக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து இந்த சிறிய கடல் பகுதி வழியாகத்தான் நடக்கிறது. இது அடைக்கப்பட்டதால், திங்கள்கிழமை மட்டும் சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7% எகிறியுள்ளது. போர் நீடித்தால் இந்த விலை உயர்வு கட்டுக்கடங்காமல் போகும் என அஞ்சப்படுகிறது.

இந்தியா ஏன் அதிகம் பயப்பட வேண்டும்?

சீனா, ஜப்பான், தென்கொரியா எனப் பல நாடுகள் மத்திய கிழக்கைச் சார்ந்திருந்தாலும், இந்தியாவுக்குத்தான் ஆபத்து அதிகம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

குறைவான கையிருப்பு: "சீனாவிடம் குறைந்தது 6 மாதங்களுக்கான எண்ணெய் கையிருப்பு உள்ளது. ஆனால் இந்தியாவிடம் இருப்பது மிகக் குறைவு," என்கிறார் ICIS அமைப்பின் அஜய் பர்மார்.

முரண்படும் புள்ளிவிவரங்கள்: இந்திய அரசோ நம்மிடம் 74 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால், கள நிலவரப்படி 20 முதல் 25 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

ரஷ்யா தந்த 'செக்'!

கடந்த சில ஆண்டுகளாக உக்ரைன் போரால் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கி வந்தோம். ஆனால், அமெரிக்காவின் நெருக்கடியால் ஜனவரி முதல் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கித் திரும்பினோம். தற்போது இந்தியாவின் 55% இறக்குமதி (தினசரி 2.74 மில்லியன் பேரல்கள்) இந்தப் போர் பதற்றம் நிலவும் நாடுகளிலிருந்தே வருகிறது.

"ஒருவேளை போர் நீடித்தால், உலக நாடுகள் அனைத்தும் ஒற்றை பேரல் எண்ணெய்க்காகப் போட்டி போட வேண்டிய நிலை வரும். அது விலையை எங்கோ கொண்டு சென்றுவிடும்."

அண்டை நாடுகளின் நிலை என்ன?

ஆசியாவின் மற்ற நாடுகள் நம்மைவிட உஷாராகவே இருக்கின்றன:

ஜப்பான்: 254 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு வைத்துள்ளது.

தென்கொரியா: 208 நாட்களுக்குத் தேவையான சேமிப்பைக் கொண்டுள்ளது.

இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா ஒரு மெல்லிய கயிற்றின் மீதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

விடை தெரியாத கேள்விகள்

இந்திய எண்ணெய் அமைச்சகம் "மக்களுக்குப் பாதிப்பில்லாத விலையில் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் 25% வரி விதிப்பு பயம் இல்லாமல் மீண்டும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க முடியுமா? அல்லது அமெரிக்கா தனது கையிருப்பை விடுவித்து விலையைக் குறைக்குமா? என்பதெல்லாம் தற்போதைக்கு மில்லியன் டாலர் கேள்விகள்தான்.

ஒட்டுமொத்தத்தில், வளைகுடா நாடுகளில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டும், இந்தியச் சராசரி மனிதனின் பாக்கெட்டைப் பதம் பார்க்கக் காத்திருக்கிறது. அரசு எடுக்கும் ராஜதந்திர நகர்வுகளே இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைத் தீர்மானிக்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+