பயங்கர பிளான்.. அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் சீனா, பாகிஸ்தான்.. இந்தியா உடனே சுதாரிக்கணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களை அதிக அளவில் உருவாக்க உள்ள நிலையில் இந்தியாவும் அணு ஆயுதங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணு ஆயுதங்களை உருவாக்க கூடிய வேகம் போதுமானதாக இல்லாத காரணத்தால் எதிர்காலத்தில் நமக்கு இது பாதுகாப்பு பிரச்சனையாக மாறலாம்.

இப்போது உள்ள ஆதாரங்களின்படி, பின்வரும் அணு ஆயுதங்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனாவிடம் உள்ளது.

இந்தியா: ~172 அணு ஆயுதங்கள்

பாகிஸ்தான்: ~170 அணு ஆயுதங்கள்

சீனா: ~500 அணு ஆயுதங்கள் (வேகமாக விரிவடைகின்றன)

இதில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா 8 அணு ஆயுதங்களை உருவாக்கியது. ஆனால் சீனா இதே காலகட்டத்தில் 80க்கும் அதிகமான அணு ஆயுதங்களை உருவாக்கி உள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களை வேகமாக உருவாக்க உள்ள நிலையில் இந்தியாவும் அதை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவின் அணு ஆயுத உருவாக்கம் வேகம் அடைய வேண்டும்.

India needs to speed up its nuclear warhead induction into its arsenal as China Pakistan heating up

அமெரிக்கா எச்சரிக்கை

இது தொடர்பாக அமெரிக்கா இந்தியாவிற்கு விடுத்த எச்சரிக்கையை, சீனா தனது ராணுவத்தை அதிநவீனமாக்கி வருகிறது. மற்ற நாடுகளை விட இதில் சீனா வேகமாக இருக்கிறது. ராணுவ நவீனமயமாக்கலை விரைவாக முன்னேற்றி வருகிறது. அனைத்து போர் களங்களிலும் திறன்களை வளர்த்து வருகிறது. ஒரு துறை என்று இல்லாமல் போர் தொடர்பான அனைத்து துறைகளிலும் சீனா வேகம் காட்டி வருகிறது.

சீனாவின் இந்த பலம் அவர்களுக்கு தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற உதவும். விரைவில் அது நடக்கலாம். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 1,000 செயல்பாட்டு அணு ஆயுதங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ளதை விட பலமடங்கு.. அதாவது 1000+ அணு ஆயுதங்களை உருவாக்க சீனா தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. இந்தியா தனது எல்லை பாதுகாப்பில் கவனமாக சிரத்தையுடன் இருக்க வேண்டும்.

இந்தியாவிடம் 100+ அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவை விட 10 மடங்கு அணு ஆயுதங்களை அதிகம் உருவாக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இந்தியாவிற்கு உண்மையான பிரச்சனையே சீனாதான். சீனாவை இந்தியா தனது முதல் எதிரியாக கருதுகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவை அப்படி பார்க்கவில்லை. பாகிஸ்தானை பொறுத்தவரை இந்தியாதான் முதல் எதிரி. பெரிய எதிரி.

பாகிஸ்தான் இந்தியாவை தங்களின் நாட்டிற்கே அச்சுறுத்தலாக பார்க்கிறது. இந்தியாவின் வழக்கமான இராணுவ பலத்தை எதிர்கொள்ள அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தொடரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் விரைவாக அதிகரிக்கும் திறன் கொண்டவை. சீனாவைத்தான் இந்தியா இதனால் பெரிய எதிரியாக பார்க்கிறது. பாகிஸ்தானை சமாளிக்கலாம் என்று நினைக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கூடுதல் அணு ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஒரே எதிரி நாடு.. ஒரே டார்கெட் இந்தியாவாகவே உள்ளது என்று DIA இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ் அமெரிக்க ஹவுஸ் ஆயுத சேவைகள் துணைக்குழுவிற்கு அளித்த உளவு ரிப்போர்ட்டில் இதை குறிப்பிட்டு உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+