இந்தியன் வங்கியில் தங்க நகையை அடகு வைக்க ஆர்வம் காட்டும் மக்கள்.. பின்னணியில் சுவாரஸ்மான காரணம்
சென்னை: பொதுவாக தங்க நகையை அடகு வைக்க மக்கள் பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கியை அதிகம் விரும்புகிறார்கள். இதில் இந்தியன் வங்கியில் மக்கள் தங்க நகையை அடகு வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு பின்னால் சுவாரஸ்மான காரணங்கள் உள்ளன. இந்தியன் வங்கி அப்படி என்னதான் திட்டங்களை செயல்படுத்துகிறது என்பதை பார்ப்போம்.
நகைகளை பலர் தனியாரில் அதிக பணம் தருகிறார்கள் என்று ஆசைப்பட்டு அடகு வைக்கிறார்கள். ஆனால் தனியார் வங்கிகளே கூட தர தயங்கும் பணத்தை இந்தியன் வங்கி தந்து வருகிறது. நகையின் மதிப்பில் 85 சதவீதம் வரை வழங்குகிறது. கிராமுக்கு 9 ஆயிரத்திற்கு மேல் தங்க நகை அடகு வைக்தால் கடன் தருகிறது இந்தியன் வங்கி.இதனால் பலர் ஆர்வமுடன் இந்தியன் வங்கியில் அடகு வைக்கிறார்கள். அதேபோல் நீங்கள் எந்த ஊராக இருந்தாலும்இந்தியன் வங்கியில் போன உடன் வங்கி கணக்கு ஓபன் செய்து தங்க நகையை அடகு வைக்க முடியும். அதன் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

மிகக் குறைந்த வட்டி விகிதம்
தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் மற்ற சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது, இந்தியன் வங்கியில் நகைக் கடனுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக சொல்வது என்றால் விவசாய நகைக் கடன், அதாவ அக்ரி கோல்டு லோன்று வங்கியால் இந்த லோன் அழைக்கப்படும்.இது தான் இந்தியன் வங்கியில் ஏக பிரபளம்.. விவசாயிகளுக்கு சுமார் 7% என்கிற அளவில் கூட மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. 3 லட்சம் வரை எந்த ஆவணமும் இன்றி அக்ரி லோனை ஏழைகள் வாங்க முடியும்.
எம்எஸ்எம்இ
அதேபோல் சாதாரண மக்களுக்கும் மற்ற வங்கிகளை விடப் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்களில் நகைக்கடனை பெற முடியும். அதேபோல் எம்எஸ்எம்இயில் தங்க நகை கடனை 8.70% வட்டியில் வாங்க முடியும். இந்த விகிதம் சற்று மாறுபடலாம். அக்ரி லோனில் வைத்தால் வட்டி குறைவு என்பதுடன், அதிக பணமும் கிடைக்கும்.
அதிக கடன் மதிப்பு
நகை மதிப்பில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் கடன் கிடைக்கும் என்பதில் இந்தியன் வங்கி முன்னணியில் இருக்கிறது. சில சிறப்புத் திட்டங்களின் கீழ் (உதாரணமாக: பம்பர் அக்ரி லோன்), தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படுகிறது. இது மற்ற வங்கிகள் வழங்கும் 75% வரம்பை விட அதிகமாகும். எனவே தனியார் மைக்ரோ பைனான்ஸில்அதிக பணம் தருகிறார்கள் என்று அடகு வைத்து நகையை இழப்பதைவிட இந்தியன் வங்கியில் எளிதாக குறைந்த வட்டியில், அதிக பணத்துக்கு அடகு வைக்க முடியும் என்பதால் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை
இந்தியன் வங்கி என்பத அரசு வங்கி. இது ஒரு பொதுத்துறை வங்கி என்பதால், தங்களின் தங்கம் பாதுகாப்பாக இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. நகைகள் வங்கியில் உள்ள 'ஸ்ட்ராங் ரூம் வசதியில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. தனியார் அடகு கடைகளில் நிலவும் ஏமாற்று வேலைகள் அல்லது அச்சுறுத்தல் இங்கு இல்லை என்பதால் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
எளிமையான நடைமுறைகள்
வருமானச் சான்றிதழ் அல்லது சிபில் ஸ்கோர் போன்ற சிக்கலான ஆவணங்கள் நகைக் கடனுக்குக் கேட்கப்படுவதில்லை. உங்களிடம் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இருந்தால் போதும், மிகக் குறுகிய நேரத்திலேயே கடன் தொகை வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால் காலையிலேயே செல்ல வேண்டியதிருக்கும்.ஏனெனில் தங்க நகை அப்ரைஸரால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 கடன்கள் வரை தான் வழங்க முடியும்.அதற்கே அவர்களுக்கு நேரம் அதிகமெடுக்கும். எனவே டோக்கன் சிஸ்டம் பின்பற்றுகிறார்கள்.
சென்னை வங்கி
வட்டி மற்றும் அசலை 12 மாதங்கள் கழித்து ஒரே தவணையாகச் செலுத்தும் வசதி உள்ளது. இது விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. அதேபோல் மாதம் மாதம் கணிசமாக கட்டினால் வட்டி குறைந்து அசலும் குறைவதும் மக்களுக்கு இந்தியன் வங்கியை பிடிக்க காரணமாக உள்ளது. அவசரத் தேவைக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொண்டு, பயன்படுத்தும் நாட்களுக்கு மட்டும் வட்டி செலுத்தும் வசதியும் சில திட்டங்களில் உள்ளது. இந்தியன் வங்கி சென்னையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஒரு வங்கி. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இதன் கிளைகள் உள்ளன. பல தலைமுறைகளாக மக்கள் இந்த வங்கியுடன் கணக்கு வைத்துள்ளதால், அவர்களுக்கு இது ஒரு 'குடும்ப வங்கி' போன்ற உணர்வு மக்களுக்கு உள்ளது. முழு தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் பாருங்கள்












Click it and Unblock the Notifications