ஊருக்கு கிளம்பிட்டீங்களா? ரயில்வே தந்த மேஜர் அறிவிப்பை பாருங்க.. "அதை" மட்டும் தொட்டுடாதீங்க.. உஷார்
சென்னை: நாளுக்கு நாள், ஆன் லைன் பண மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியன் ரெயில்வே மிக முக்கிய வேண்டுகோள் ஒன்றினை பொதுமக்களிடம் விடுத்துள்ளது.
ரயிலில் பயணம் மேற்கொள்வதற்காக, முன்பதிவுக்காக ஐஆர்சிடிசி வெப்சைட் மற்றும் செயலியை பயணிகள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஐஆர்சிடிசி செயலிகளை செல்போனில் டவுன்லோடு செய்வதில், மோசடிகளில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது..

அதாவது, ஐஆர்சிடிசியில் தளத்தின் பெயரில், போலியாக எஸ்எம்எஸ்களில் சில ஃபிஷிங் இணைப்புகளை கொடுத்து, அதன்மூலம் பயணிகளிடம் பணம் பறித்துவிடுகிறார்கள். இதற்குதான், ஏற்கனவே, ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
ப்ளே ஸ்டோர்: ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் என்ற பெயரிலான செயலியை கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தில் ஆப் ஸ்டோர் ஆகிய இடங்களில் நேரடியாக சரிபார்த்து தரவிறக்கம் செய்து கொள்வது அவசியம், மாறாக முன்பதிவு அவசரத்தில் மூன்றாம் நபர்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் இணைப்புகளை நம்பி, செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு வெளியாள் இணைப்பை சொடுக்கி, ஐஆர்சிடிசி பெயரிலான மோசடி செயலிகளை செல்போனில் தரவிறக்கம் செய்யும்போது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து நேர வாய்ப்பாகிறது.. இதன்படி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி இருப்பு வரை களவு போகவும் நேரிடலாம். எனவே, ஐஆர்சிடிசி செயலியை தரவிறக்கம் செய்வதில் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தது.
மோசடிகள்: இந்நிலையில், இதே போன்ற மோசடிகள் மேலும் தொடர்ந்து வருகின்றன.. எனவே, மறுபடியும் ஐஆர்சிடிசி பொதுமக்களை அலர்ட் செய்துள்ளது. மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து தனது அதிகாரப்பூர்வ ரயில் கனெக்ட் மொபைல் செயலிகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு ஐஆர்சிடிசி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ செயலிகளை தவிர, மற்ற வெப்சைட்களில் கிடைக்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என்றும், ஐஆர்சிடிசியில் இருந்து அனுப்பப்படுவதாக வரும் போலி எஸ்எம்எஸ்களில் உள்ள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் ஐஆர்சிடிசி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அலர்ட் எச்சரிக்கை: ஒருவேளை, போலி செயலிகளின் மூலம், பயணிகள் மோசடிக்கு உள்ளாவது தெரியவந்தால், உடனடியாக [email protected] என்ற மெயில் அட்ரசுக்கு புகார்களை அளிக்க வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது செயலிகள் சரியானதுதானா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியிருக்கிறது.
இப்படித்தான், கோழிக்கோடு வண்டிப்பேட்டையைச் சேர்ந்த எம். முகமது பஷீர் என்ற 78 வயது முதியவர், ஆர்டிடிசி இணையதளத்தை பயன்படுத்தி தன்னுடைய ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ய முயன்றிருக்கிறார்.. ஆனால், மோசடியில் சிக்கி ரூ.4 லட்சத்தை இழந்துவிட்டாராம்.. ஒருவர், ரயில்வே ஊழியர் போல் மேக்கப் போட்டுக் கொண்டு, இப்படியான மோசடியில் இறங்கியது தெரியவந்தது. எனவேதான் ரயில்வே நிர்வாகம் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications