Indian Railway: ரயில் டிக்கெட் புக்கிங்.. சுத்திக்கிட்டே புக் ஆகாம போகுதா? பிரச்சினைக்கு எண்டு கார்டு போடும் ரயில்வே!
சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவில் உள்ள சிக்கல்கலை சீர் செய்து ஒரு நிமிடத்திற்கு 1.25 லட்சம் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யும் அளவுக்கு திறன் கொண்டதாக ரயில்வே டிக்கெட் புக்கிங் சிஸ்டத்தை மேம்படுத்தும் பணிகளில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதத்திற்குள் மேம்பட்ட தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் பயணிகள் விரைவாக டிக்கெட் புக் செய்ய முடியும்.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்கள். தொலைதூரம் என்றாலும் சரி.. உள்ளூர் போக்குவரத்து என்றாலும் சரி.. ரயில்கள் இருந்தால் அதில் பயணிப்பதே பயணிகளின் முதல் சாய்சாக இருக்கும்.

டிக்கெட் புக் செய்யும் வசதி
ரயில்களை பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பு வரை டிக்கெட் புக் செய்ய முடியும் வசதி உள்ளது. திடீர் பயண திட்டம் என்றால் தட்கலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். தட்கல் டிக்கெட்டை பொறுத்தவரை சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு என்றால் காலை 11 மணிக்கும், ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும் முன்பதிவு தொடங்கும்.
தட்கல் அல்லாத சாதாரண முன்பதிவு என்றால், புக்கிங் தொடங்கும் நாளில் காலை 8 மணி முதல் புக் செய்ய முடியும். ஆனால், இந்த டிக்கெட் எல்லாம் யாருக்கும் கிடைக்கிறதோ தெரியவில்லை. குலுக்கலில் பரிசு விழுந்தது போலத்தான் டிக்கெட் கிடைக்கிறது என்று சொல்லும் அளவிற்கு ரயிலில் டிக்கெட் கிடைப்பது பெரும் பாடாக உள்ளது.
பயணிகள் கடும் அப்செட்
தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது பாதி நேரங்களில் டிக்கெட் கட்டணம் அக்கவுண்டில் இருந்து டெபிட் ஆகிவிடும். ஆனால், முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் சுத்திக்கொண்டே இருந்தால் வெயிட்டிங் லிஸ்ட் அல்லது டிக்கெட் காலியாகிவிட்டதாக திரையில் தோன்றும். இதனால், பயணிகள் கடும் அப்செட் ஆகும் நிலையே உள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்வதில் உள்ள சிரமங்களை குறைக்க வேண்டும் ரயில் பயணிகள் ரயில்வேக்கு வலியுறுத்தி வந்த நிலையில், டிக்கெட் புக்கிங்கில் இருக்கும் தொழில் நுட்ப சிக்கல்களை தீர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
5 மடங்கு வேகம் அதிகரிப்பு
சுமார் ஆயிரம் கோடி செலவில் பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.. இந்த டிக்கெட் முன்பதிவை மேலும் வேகமாகவும், நியாயமான முறையிலும், மிகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படச் செய்வது என்ற நோக்கத்துடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மேம்பட்ட சிஸ்டத்தின் மூலம், தற்போது ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலை இருப்பதை 1,25,000 டிக்கெட் முன்பதிவு செய்யும் அளவுக்கு வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது இருக்கும் வேகத்தை விட 5 மடங்கு வேகம் அதிகமாக உள்ளது. இந்த புதிய வசதி வரும் ஏப்ரல், ஜூனில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறைகேடுகள் இனி நடக்காது
இந்த மேம்பட்ட சிஸ்டமானது, நிலைத்தன்மை உடையதாகவும் தவறான நோக்கத்துடன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலும் இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, ரயில் டிக்கெட் புக்கிங்கின் போது நீண்ட காலமாக முகவர்கள் மற்றும் தானியங்கி 'பாட்கள்' பயன்படுத்தி டிக்கெட் புக்கிங்க் செய்யப்படுவதை களைவதில் இது முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேடர், ஸ்பேஸ் எக்ஸ், அவெஞ்சர் போன்ற செயலிகளை பயன்படுத்தி டிக்கெட் புக்கிங்கில் முறைகேடு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த செயலிகளில் பயன்படுத்தி ஏஜெண்ட்கள் முன்கூட்டியே பயணிகளின் பெயரை பதிவு செய்து புக் செய்து ஓடிபி, கேப்ஷா இன்றி நேரடியாக பாட் மூலமாக புக் செய்கிறார்கள். இதனால், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது.
விரைவில் வர இருக்கும் மேம்பட்ட அப்டேட்டில் இதுபோன்ற முறைகடுகள் தடுக்க முடியும் என்பதால் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications