Indian Railways: ரயில்களில் மிடில் பெர்த் டிக்கெட்டில் பயணிப்பவரா நீங்கள்? இந்த விதிகளை தெரிஞ்சுக்கோங்க
சென்னை: ரயில்களில் டிக்கெட் புக் செய்யும் டிக்கெட் கிடைத்தாலும் மிடில் பெர்த் என்றால் பயணிகளுக்கு கொஞ்சம் சலிப்பே ஏற்படும். ஏனெனில் மிடில் பெர்த் சீட்டை பகல் நேரத்தில் பயன்படுத்தினால் சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். இதனால் சில நேரங்களில் தேவையில்லாத வாக்குவாதமும் பயணிகளுக்கு இடையே ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
ரயில்களில் மிடில் பெர்த் படுக்கையை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ரயில்வே விதிகளும் கூறுகிறது. இது பற்றி ரயில்வே விதிகள் என்ன கூறுகிறது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

மூன்றடுக்கு படுக்கைகள்
இந்தியாவில் பயணிகள் தங்கள் பயண தேவைக்கு பெரிதும் ரயில்களையே சார்ந்து இருக்கிறார்கள்.. மலிவான கட்டணம், படுக்கை வசதி, கழிவறை வசதி ஆகியவை இருப்பதால் பேருந்து பயணத்தை விட ரயில் பயணமே பயணிகளின் முதல் சாய்சாக இருக்கிறது. ரயில்களில் டிக்கெட் சாதரண ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் மூன்றடுக்கு படுக்கைகள் இருக்கும்.
அதாவது லோயர் பெர்த், மிடில் பெர்த், அப்பர் பெர்த் என மூன்று வகையான படுக்கைகள் பயணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதில் லோயர் படுக்கை எனப்படும் கீழ் படுக்கை முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கப்படுகிறது. மேல் படுக்கையை இளைஞர்கள், சிறுவர்கள் ஆகியோர் அதிகம் விரும்பி பயன்படுத்துவதை பார்க்க முடியும்.
எப்போது பயன்படுத்தலாம்?
இதில் மிடில் பெர்த் தான் பயணிகளுக்கு பெரிய தலைவலியாக வந்து அமையும். ஏனெனில் மிடில் பெர்த் படுக்கையை தேவைப்படும் போது மட்டும் எடுத்து பயன்படுத்திக்கொள்லலாம். தேவையில்லாத நேரத்தில் அதை கீழே இறக்கி விட்டுக்கொள்ள முடியும். இதில் பிரச்சினை என்னவென்றால் மிடில் பெர்த் படுக்கையை பயணிகள் செட் செய்தால் கீழே உள்ள படுக்கையில் பயணிகள் அமர்ந்து பயணிப்பதில் சிரமம் ஏற்படும்.
இதனால், சில நேரங்களில் பயணிகளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இதனால் மொத்த பயணமும் அப்செட்டாக பயணிகளுக்கு மாறிவிடும். இந்த நிலையில்தான் பயணிகள் மிடில் பெர்த் பயன்படுத்துது தொடர்பாக விதிமுறைகளை ரயில்வே வாரியம் வைத்துள்ளது. அந்த விதிமுறையில் பயணிகள் படுக்கைகளை எப்போது பயன்படுத்தலாம் என்பது பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. பல பயணிகளுக்கு இந்த விவரங்கள் தெரியாத நிலையில், அது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
விதிகள் என்னென்ன?
* ரிசர்வேஷன் பெட்டிகளில் மிடில் பெர்த் படுக்கையை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு பயன்படுத்தலாம்.
* அதன் பிறகு பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருக்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.
* அதே நேரத்தில் இந்த விதியில் இருந்து சில பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பயணிகள் தூங்க விரும்பினால் டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற்றுக்கொள்லாம்.
* அதேபோல கீழே உள்ள படுக்கையில் உள்ள பயணி அனுமதித்தால் கூடுதல் நேரம் பயன்படுத்திகொள்ள முடியும்.
புகார் அளிக்க முடியும்
* 6 மணிக்குப் பிறகு மிடில் பெர்த் பயன்படுத்தி பிற பயணிகளுக்கு இடையூறு அளித்தால், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் அல்லது ரயில்வே ஹெல்ப் லைன் 139- பயணிகள் புகார் அளிக்கலாம்.
* பயணிகள் இரவு நேர 10 மணிக்கு பிறகு சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சத்தமாக நடந்து கொள்ளக்கூடாது.
* வெளிச்சமான விளக்குகளை தேவையின்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications