ரயிலில் யாரெல்லாம் 75 சதவீதம் வரை கட்டண சலுகை பெறலாம் தெரியுமா? முழு விவரம் இதோ
சென்னை: உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க்காக திகழும் இந்திய ரயில்வே, தினமும் 13,600 ரயில்களின் மூலம் 2 கோடி பயணிகளை பாதுகாப்பாக பயண இடங்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. சரக்கு போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், பயணிகள் வருவாய் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், பயணிகளின் வசதிக்காக பல்வேறு சலுகைகளையும் ரயில்வே செயல்படுத்திதான் வருகிறது.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க, பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. ரயில்கள் வேகத்தையும் அதிகரித்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, பல்வேறு பிரிவினருக்கு சலுகைகளையும் வழங்கி வருகிறது.

உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்காமல் இல்லை. முதியோருக்கு வழங்கிய கட்டணச் சலுகை ரத்தாகிவிட்டதே என்பதுதான் அது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பல எம்பிக்கள் கேள்வி எழுப்பியும் மத்திய அரசு அதற்கு மட்டும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால், தற்போது நடைமுறையிலுள்ள சில சலுகைகள், உங்களுக்கு தெரிந்த யாருக்காவது உதவக் கூடும். அதுகுறித்த ஒரு பார்வை.
புற்றுநோய், கிட்னி நோய், காசநோய், தாலசீமியா, மனநோய், பார்வைக் குறைபாடு போன்ற தீவிர நோயாளிகளுக்கு ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் பிரிவுகளில் பயணிக்கும் போது 75% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், சிகிச்சைக்காக வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்லும் நோயாளிகளுக்கு பெரும் தொகை மிச்சமாகிறது.
கல்வி நோக்கம்: உயர்கல்வி கற்க வெகு தொலைவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு, அவர்கள் பயணிக்கும் ரயில் பிரிவைப் பொறுத்து 50% முதல் 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்தப் பயணத்தை குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும்.
போட்டித் தேர்வு: UPSC, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களும் இந்த சலுகையைப் பெறலாம். தேர்வு அனுமதிச் சீட்டுடன் பயணிக்கும் போது, அவர்களுக்கு குறிப்பிட்ட சலுகை வழங்கப்படுகிறது.
இந்திய ரயில்வே: இந்திய ரயில்வேயின் இந்த சலுகைகள், பயணிகளின் அன்றாட வாழ்க்கையில் ஓரளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். எனவே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தகவலை பாஸ் செய்துவிடலாமே பாஸ்.
வந்தே பாரத்: இந்திய ரயில்வே தற்போது அதிவேக ரயில்களை இயக்கி வருகிறது. ராஜதானி மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகின்றன. மேலும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க இந்திய ரயில்வே தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், விபத்துகள் எண்ணிக்கையை குறைக்கவும் மனசு வைக்கனும் ரயில்வே என்பதே மக்கள் கோரிக்கை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications