11,00,00,00,00,000 லாஸ்.. பங்குச்சந்தையை பஞ்சராக்கிய பட்ஜெட்! 1 மணி நேரத்தில் முடிச்சி விட்ட நிர்மலா
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதே நேரத்தில் இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. 1500 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
2026 - 2027 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறு குறு தொழில் நிறுவனங்கள், பங்குச் சந்தைகள், தங்கம் வெள்ளி உள்ளிட்டவற்றுக்கு ஆதரவாக பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பட்ஜெட் தங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளித்ததாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். மின்னணு வாகனங்களுக்கு ஆதரவு போன்ற அம்சங்கள் இருந்தாலும் இந்த பட்ஜெட் எதிர்ப்பையும் ஆதரவையும் ஒருசேர சந்தித்திருக்கிறது.

மத்திய பட்ஜெட் 2026
அதே நேரத்தில் பட்ஜெட் தாக்கல் ஆகிக்கொண்டிருந்த போதே இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கின. 1500 புள்ளிகள் வரை சரிவடைந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பட்ஜெட் உரை நடைபெற்று கொண்டிருந்த நேரத்திலேயே பங்குச் சந்தைகள் சரிவை சந்திக்க தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த நிலையில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
பங்குச் சந்தை வீழ்ச்சி
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்திற்கான பங்கு பரிவர்த்தனை வரி (STT) உயர்வு பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்திற்கு விதிக்கப்படும் வரி 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகவும், ஆப்ஷன்ஸ் வர்த்தக வரி 0.1 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில் F&O வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்கள், குறிப்பாக 'டே ட்ரேடர்கள்' மற்றும் பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
சென்செக்ஸ் சரிவு
கூடுதல் வரிச்சுமை லாப வரம்பை நேரடியாக பாதிக்கும் என்பதால், சந்தையில் விற்பனை அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கணிசமான வீழ்ச்சியை சந்தித்தன. சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு குறைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,546.84 புள்ளிகள் (1.88%) சரிந்து 80,722.94 புள்ளிகளிலும், நிஃப்டி 495.20 புள்ளிகள் (1.96%) வீழ்ச்சியடைந்து 24,825.45 புள்ளிகளிலும் நிலைபெற்றது.
முதலீட்டாளர்கள் இழப்பு
பட்ஜெட் அறிவிப்புகளின் தாக்கம் அடுத்த சில நாட்களிலும் பங்குச் சந்தைகளில் தொடர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த சில தினங்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது சரிவை சந்திக்க தொடங்கி இருப்பதையும் கவனிக்க வேண்டும். இதன் தாக்கமும் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. எனவே பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications