எரிபொருளுக்கு தனி கட்டணம்! விமான பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இண்டிகோ நிறுவனம்!
சென்னை: பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், இனி எரிபொருளுக்கு என தனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேற்கு ஆசிய மோதல்களால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோவும், ஏர் இந்தியாவும் அரசு நிவாரணம் கோரி வருகின்றன. எரிபொருள் வரிகளைக் குறைக்குமாறும், தனியார் விமான நிலையக் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும்படியும் மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி நெருக்கடி
பாகிஸ்தான் வான்வெளிக்கான இராஜதந்திர தடை ஒருபுறம் இருக்க, ஈரான் மோதலால் மேற்கு ஆசிய வான்வெளியைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய இரட்டைச் சுமையால் இண்டிகோ, ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் நீண்ட வழித்தடங்களில் சென்று அதிக சர்வதேச இயக்கச் செலவுகளைச் சந்திக்க நேர்வதால், நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது.
இண்டிகோ பிரிட்டனுக்கு ஆப்பிரிக்கா வழியாகவும், ஏர் இந்தியா வட அமெரிக்கா செல்லும் சில விமானங்களுக்கு கூடுதல் நிறுத்தம் செய்தும் விமானங்களை இயக்குகின்றன. இதனால், வரிகள், கட்டணங்களில் நிதி நிவாரணம் வழங்க இந்திய அரசிடம் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமான நிறுவனங்களின் மொத்த செலவில் 30-40% விமான போக்குவரத்து டர்பைன் எரிபொருள் (ATF) செலவாகும். இதற்கு 11% மத்திய அரசு வரியும், 29% வரை மாநில வரிகளும் விதிக்கப்படுகின்றன. இண்டிகோ இந்த வரியைக் குறைக்க நிதியுதவி கோரி வருகிறது. இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கருத்து தெரிவிக்கவில்லை.
இண்டிகோவும், ஏர் இந்தியாவும் தனியார் விமான நிலையங்களில், குறிப்பாக பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை நெறிப்படுத்தக் கோரியுள்ளன. இவை அரசு விமான நிலையங்களை விட அதிகமாக உள்ளதால் குறைக்கப்பட வேண்டும் என நிறுவனங்கள் வாதிடுகின்றன.
விமானங்கள் ரத்து
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் மார்ச் 9 வரை, இந்த இரண்டு விமான நிறுவனங்கள், மேற்கு ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்காவிற்கான 1,230 திட்டமிடப்பட்ட விமானங்களில் 64 சதவீதத்தை இயக்கவில்லை.
இப்படி இருக்கையில், தூரத்தை பொறுத்து விமான பயண கட்டணத்தை மாற்றியமைக்க இரண்டு நிறுவனங்களும் முடிவெடுத்துள்ளன. அதன்படி
0 - 500 கி.மீ₹425, 501 - 1000 கி.மீ₹750, 1001 - 1500 கி.மீ₹1,100, 1501 - 2500 கி.மீ₹1,500, 2501 - 3500 கி.மீ₹1,900, 3501 கி.மீ-க்கு மேல்₹2,300 என பயண கட்டணத்தை வசூலிக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த கட்டணம் நாளை முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications