குடும்பத்தினர் இறந்தால் கைவிரலை வெட்டிக்கொள்ளும் பெண்கள்! ஏன் இப்படி செய்றாங்க? பின்னணியில் ஷாக்
சென்னை: நம் ஊர்களில் குடும்பத்தினர், உறவினர்கள் காலமானால் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுவதை பார்த்த இருக்கிறோம். ஆனால் ஒரு தரப்பு மக்கள் தங்களின் குடும்பத்தில் யாரும் இறந்தால் தங்களின் கைவிரல்களை வெட்டி கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஏன் அவர்கள் இப்படி செய்கின்றனர்? வாங்க பார்க்கலாம்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் பல்வேறு கலாசாரம், பண்பாட்டை கொண்டுள்ளனர். உணவு முறை முதல் கடவுள் வழிபாடு, வாழ்க்கை முறை என அனைத்தும் பல வேறுபாடுகளை கொண்டுள்ளனர்.

குறிப்பாக உலகம் முழுவதும் வசித்து வரும் பழங்குடியின மக்கள் இன்னும் தங்களின் முன்னோர்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர்.
பழங்குடியினர் பின்பற்றி வரும் சில பழக்க வழக்கங்கள் என்பது விசித்திரமானதாக இருக்கிறது. அந்த வகையில் தான் இந்தோனேசியாவில் வசித்து வரும் பழங்குடியினத்தவர்களின் குடும்பத்தில் ஒருவர் மரணமடையும் பெண்களின் விரல்கள் துண்டிக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை.
இந்த வினோத பழக்க வழக்கத்தை கொண்டுள்ளவர்கள் டானி என அழைக்கப்படும் பழங்குடியினர். இவர்கள் இந்தோனேசியாவில் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடி மக்களிடம் மூடநம்பிக்கை ஒன்று உள்ளது. அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் வீட்டில் உள்ள பெண்கள் கையில் உள்ள ஒரு விரலின் மேல்பகுதியை துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது தான் அவர்களின் நம்பிக்கை.
அதோடு விரல் வெட்டப்பட்டு இருப்பதன் மூலம் இருக்கும் கைகளில் தொர்ந்து வலி என்பது இருக்கும். இந்த வலி என்பது குடும்பத்தில் இறந்தவரை நினைத்து மனதில் உருவாகும் வலியை குறைக்கும் என அவர்கள் நம்புகின்றனர். மேலும் இந்த விரல் வெட்டு சம்பவம் என்பது ஒருமுறை மட்டும் நடக்காது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் மரணமடையும்போது பெண்கள் தங்களின் கைவிரல்களை வெட்டிக்கொள்ள வேண்டும். இதனால் டானி பழங்குடியினத்தை சேர்ந்த பல பெண்களின் கைகளில் விரல்கள் என்பது இல்லாத நிலை உள்ளது.
மேலும் இந்த விரலை துண்டிக்கும்போது வலி தெரியாமல் இருக்க அவர்கள் ஒருவித வழிமுறையை பின்பற்றுகின்றனர்.
அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்த பிறகு பெண்ணின் விரல்கள் கயிற்றால் மிகவும் இறுக்கமாக கட்டப்படுவார்கள். இப்படி செய்வதன் மூலம் விரலில் ரத்த ஓட்டத்துக்கு தடை ஏற்படும். இந்த வேளையில் விரல்களை வெட்டினால் வலி குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் இப்படி செய்கின்றனர்.
இருப்பினும் குடும்பத்தில் ஒருவர் இறந்தால் டானி பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்கள் தங்களின் விரல்களை வெட்டிக்கொள்வது இல்லை. இதனால் இந்த நடைமுறைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்தோனேசியாவில் இதனை கண்டித்து பெரிய அளவில் கூட போராட்டம் நடந்தது. தற்போது சில இடங்களில் இந்த நடைமுறை கைவிடப்பட்டாலும் கூட இன்னும் சில இடங்களில் இன்னும் கூட செயல்பாட்டில் உள்ளது என்பது வருத்தத்துக்குரிய செயலாகும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications